இந்திய விடுதலைப் போரில் தமிழகம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய விடுதலைப் போரில் தமிழகம்

Hindu Communalism 

 • இந்திய விடுதலைப் போரில் தமிழகம்
 • தமிழ்நாடு காங்கிரஸின் தொடக்க கலாமும்
 • தமிழ்நாட்டு மிதவாதிகள்
 • தன்னாட்சி இயக்கம்
 • ரௌலட் சத்தியாக்கிரகம்
 • கிலாபத் இயக்கம்
 • நீதிக்கட்சியும் இரட்டை ஆட்சியும்
 • ஒத்துழையாமை இயக்கம்
 • சுயராஜ்யக் கட்சி
 • சுதந்திர போரில் தமிழ் இதழ்கள்

இந்திய விடுதலைப் போரில் தமிழகம்

 • இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் தமிழ்நாடு மிக முக்கியப் பங்காற்றியது புலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுத்தம்பி போன்ற மாபெரும் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர் இவர்கள் அனைவரும் தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள் ஆங்கில ஆட்சியின் போது மாபெரும் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜி. சுப்பிரமணிய அய்யர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணியபாரதி, சி.ராசகோபாலாச்சாரி, பெரியார் ஈ.வெ. இராமசாமி, திருப்பூர் குமரன், கே.காமராஜ் மற்றும் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்காற்றி இந்திய விடுதலைக்குப் பாடுபட்டனர்.

வேலூர் கலகம் 1806

 • ஆங்கிலேயர்கள் ராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் வேலூர் கலகத்திற்கு வழிவகுத்தது. இந்து வீரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தங்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது ராணுவ வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது திப்புவின் பிள்ளைகள் இவர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
 • 1806 ஜீலை 9 ஆம் நாள் வேலூர் கோட்டையில் திப்புவின் மகள் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்து கொள்ளுவதற்காக வீரர்கள் வேலூர் கோட்டையில் கூடினர். நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10 ம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர். திப்புவின் கொடி, வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டது திப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார் இருப்பினும் இக்கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் அடக்கப்பட்டது.

சென்னை மகாஜன சபை

 • சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம். இதனை 1852 ஆம் ஆண்டு ஹார்லி – இலஷ்மி நரசுச் செட்டி மற்றும் சீனிவாசப் பிள்ளை ஆகியோர் நிறுவினர். இச்சங்கம் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்கைகளை விமர்சனம் செய்தது 1884 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது எஸ். இராமசாமி முதலியார். பி.அனந்தாசாருலு, மற்றும் இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர். இச்சபை சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள இந்து பத்திரிக்கை அலுவலகத்தில் செயல்படத்தொடங்கியது
 • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சபை பல்வேறு நோக்கங்களைக் கொண்டு செயல்படத் துவங்கியது இந்திய அரசப் பிரதிநிதி எல்ஜின் பிரபு, டிசம்பர் 1895 ஆம் ஆண்டு சென்னைக்கு பயணம் மேற்கொண்ட போது சென்னை மகாஜன சபை வழங்கிய வரவேற்புரையை ஏற்க மறுத்தார். சென்னை மகாஜன சபை சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியது இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்பியது. 1920 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டது. 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ்டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப் பகுதியில் தலைமையேற்று நடத்தியது அப்போராட்டத்தின் போது உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் இதனை விசாரிக்க மூன்றுபேர் கொண்ட குழு நீதிபதி டி.ஆர்.இராமசந்திர அய்யர் தலைமையில் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது

 

Click Here to Download