மின் வெப்ப சாதனங்கள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 • மின் வெப்ப சாதனங்கள் அனைத்திலும் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்கும் கம்பி ஒன்று இருக்கும். இது வெப்பமேற்றும் பொருள் எனப்படும். இது தனிவகைப் பொருளால் (நிக்ரோம்) செய்யப்பட்ட கம்பிச்சுருள் ஆகும்.
 • மின்னோட்டம் செல்லும்போது அதிக அளவு வெப்பமடையும். இந்த வெப்பம், உணவு சமைக்கவும், (மின் அடுப்பில்) நீரைச் சூடாக்கவும் (மின் வெந்நீர் கொதிகலம்) பயன்படுகின்றது.
 • மின்விளக்கினுள் டங்ஸ்டனால் செய்யப்பட்ட சுருள்வடிவக் கம்பி உள்ளது. இது மின்னிழை எனப்படும்.
 • மின்விளக்கில் உள்ள மின்னிழையின் வழியே மின்னோட்டம் செலுத்தப்படும் போது நன்றாகச் சூடேற்றப்பட்டு பிரகாசமான ஒளியைத் தருகின்றது.

மின் உருகு இழை (Electric Fuse)

 • அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதமடையாமல் தடுக்க, மின் உருகு இழை என்ற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
 • மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு மின் உருகு இழை எனப்படும்.
 • மின் உருகு இழையை, அது உருகிய பிறகு மாற்றி அமைக்க வேண்டும்.
 • தத்துவம் மற்றும் செயல்பாடு மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் மின் உருகு இழை செயல்படுகிறது.
 • கம்பியானது வெப்பமடையும்போது எளிதாக உருகும் பொருளினால் செய்யப்பட்டிருக்கும். இது தன் வழியே குறிப்பிட்ட பெரும மின்னோட்டத்தை அனுமதிக்கும்படி வடிவமைக்கப்படும்.
 • மின்னோட்டமானது இப்பொருள் மதிப்பிற்கு மேற்படும் போது, கம்பியானது வெப்பமடைந்து உருகிவிடும். இதனால் மின் சுற்றுத் துண்டிக்கப்பட்டு, சுற்றில் செல்லும் மின்னோட்டம் தடை செய்யப்படும்.

சிறிய அளவிலான மின்சுற்று திறப்பான் (Miniature circuit breaker)

 • மின்சுற்றுத் திறப்பான் என்பது அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போதோ, மின்சுற்றில் குறுக்குத் தடம் ஏற்படும்போதோ மின்சுற்றைப் பாதுகாக்கும் தானாக செயல்படும் ஒரு சுவிட்ச் ஆகும்.
 • மின்சுற்று திறப்பான்கள் தானாகவோ, நம்மாலோ மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]