வெப்பவியல் | tnpsc study materials

maanavan physics

வெப்பம்

  • வெப்பத்தின் அலகு ஜூல்.
  • வெப்ப நிலையின் அலகு செல்சியஸ் (அல்லது) கெல்வின்
  • மனித உடம்பின் சராசரி வெப்ப நிலை – 36.900c
  • செல்சியஸிக்கும் கெல்வினுக்கும் உள்ள தொடர்பு k = c+273

வெப்பவியலின் அடிப்படைக் கருத்துகள்:

  • 1 கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின் வெப்பநிலை உயர்த்துவதற்குச் செய்யப்பட வேண்டிய வேலை அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.
  • ஒரு பொருளின் வெப்ப ஏற்பத் திறன் என்பது அதன் வெப்ப நிலையை 1 கெல்வின் உயர்த்துவதற்குச் செய்யப்பட வேண்டிய வேலையைக் குறிக்கும்
  • வெப்பப் பொருளால் இழந்த வெப்பமானது, குளிர்ந்த பொருளால் ஏற்கப்பட்ட வெப்பத்திற்கு சமமானது
  • திண்மப் பொருளின் உருகுதலின் மறை வெப்பம் எனப்படுவது ஒரு கிலோ கிராம் நிறையுள்ள திண்மப் பொருளை அதன் உருகுநிலையில் திரவமாக மாற்றத் தேவையான வெப்பம் ஆகும்.
  • ஒரு திரவத்தின் ஆவியாதலின் மறை வெப்பம் எனப்படுவது ஒரு கிலோ கிராம் திரவம் அதன் கொதிநிலையில் ஆவியாவதற்குத் தேவைப்படும் வெப்பம் ஆகும்.
  • ஈரப்பதம் என்பது வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளவைக் குறிக்கும்.
  • வெப்பச் சமநிலை (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை இயக்கச் சமநிலை (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.

 

இட்றௌட்டன் விதி (Trouton’s rule ) என்பது ஆவியாதலின் மறை வெப்பத்திற்கும் கொதிநிலைக்குமுள்ள ஒரு தொடர்பை காட்டுவதாகும். 1876-ல் முதலில் பிக்டெட் முன்மொழிய 1877 இல் ராம்சேயும் அதன் பின் 1884 இல் இட்றௌட்டனும் இந்த விதியினை முன் வைத்தனர். இவ்விதிப்படி ஒரு மூலக்கூறின் ஆவியாகும் மறை வெப்பத்திற்கும் தனிவெப்பநிலை அலகில் அதன் கொதிநிலைக்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.