Education News

மாணவன் சார்பாக, இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Happy Teachers Day @ MaanavaN

 • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களைக் கொண்டாடி மகிழும், இந்த தினத்தின் சிறப்புகள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
 • மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள நபர்கள் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே.
 • நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களை நாம் கொண்டாட வேண்டியது அவசியம் தானே.
  இவர்களுக்கு நன்றி சொல்ல ஒருநாள் போதாது. இருப்பினும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

ஆசிரியர் பணியே அறப்பணி: 

 • வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியரின் பணி அல்ல. அவற்றையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும். இதன் அடிப்படை கூறுகளாக ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவற்றைக் கூறலாம். இப்பணியைச் செய்வதற்கு தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராகவும் செயல்பட வேண்டும்.

எப்படி வந்தது ஆசிரியர்கள் தினம்? 

 • ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஒருநாள் போதாது ஆசிரியர்களைக் கொண்டாட! 

 • செப்டம்பர் 5ஆம் தேதி வந்துவிட்டாலே, மாணவர்களுக்கு கொண்டாட்டம் நிறைந்த நாளாக மாறிவிடும். தங்களுக்கு உலகை கற்று தரும் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும், பரிசுகளையும் வாரி வழங்குவர். இந்த நாளை ஒட்டி பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகின்றன.

யார் இந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்? 

 • திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கந்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
 • 1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923ஆம் ஆண்டு ”இந்தியத் தத்துவம்” என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
 • 1931ஆம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker