ஜிம்னோஸ்பெர்ம்ஸ் & ஆஞ்சியோஃஸ்பெர்ம்ஸ்

ஜிம்னோஸ்பெர்ம்ஸ் (Gymnosperms) வகைபாடு

 

 • திறந்த விதைக் கொண்ட தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள் என்று பெயர். இவை பெரும்பாலும் டயானோசார்கள் காலத்தில் வாழ்ந்தவைகள்.
 • ஜிம்னோஸ்பெர்ம்களின் காணப்படும் மிக உயரமான மரம் ‘செக்கோயா’ ஆகும்.
 • ஜிம்னோஸ்பெர்களில் இருவகையான இலைகள் உள்ளன. அவை முறையே செதில் இலைகள், பசுமை மாறா ஒளிச்சேர்க்கை இலைகள் என்று பெயர்.
 • சேம்பர் லைன் 1934 ல் ஜிம்னோஸ்பெர்களை இரண்டு வகுப்புகளாக பிரித்தார்.
 • ஜிம்னோஸ்பெர்ம்கள் ‘சிம்பாஸிஸ்’ கூட்டுயிர் வாழ்க்கை இத்தாவர வேர்களில் நிலப்பசும் பாசிகள் காணப்படுகின்றன. எனவே
 • இவை நைட்ரஜன் கிடைக்க வழி செய்கின்றன.
 • இத்தாவர வேருடன் பூஞ்சைகளும் காணப்படுகின்றன.
 • இவற்றிற்கு ‘மைக்கோரைசா’ வேர்ப்பூஞ்சை என்று பெயர்.
 • இவைகளில் காற்றினால் மகரந்தச் சேர்க்கை (Anemophilous) என்று பெயர்.
 • இரண்டு கேமிட்டுகள் அண்டத்தை அடைந்த போதிலும், ஒன்று மட்டும் அண்டத்தை அடைந்து கருவுற செய்கிறது.
 • இதற்கு எளிய கருவுறுதல் (Simple Fertilisation) என்று பெயர்.
 • பல ஆர்க்கிகோனியங்களின் அண்டங்கள், கருவுற்று பல கருக்களை உருவாக்கக்கூடும் இதற்கு பலக்கருநிலை (Polyembryony) என்று பெயர்.
 • பைனஸ் ஒரில்லம் தாவரம்
 • பைனஸில் எளிய பல கருநிலை, கூட்டு பல கருநிலை காணப்படும்.
 • ஒவ்வொரு சூல் நியுசெல்லஸ் என்ற அடர்ந்த திசுவைக் கொண்டுள்ளன.
 • பைனஸின் விதை முளைத்தல், தரைமேல் (Epigeal) விதை முளைத்தல் ஆகும்.
 • பைனஸ் ஒரு பசுமை மாறா தாவரம்.
 • தரமான மரக்கட்டைகள் தயாரிக்க செட்ரஸ் (Cedrus deodara) பயன்படுகிறது.
 • செட்ரஸ் தாவரத்திலிருந்து பெறப்படும் எண்ணெய் மார்பு சளிக்கு மருந்தாக பயன்படுகிறது.
 • பைனஸ் தாவரத்திலிருந்து ரெசின்கள், வார்னிஷ்கள், பெயின்ட்கள், எனாமல், பிளாஸ்டர்கள் போன்ற தயாரிக்கப் பயன்படுகிறது.
 • எஃபிட்ரைன் என்ற அல்கலாய்டு மருத்துவ துறையில் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
 • காகித உற்பத்தியில் அகாத்திஸ் பெருமளவு பயன்படுகிறது.
 • பொதுவாக அழகு தரும் தாவரமாக அரக்கேரியா பயன்படுகிறது.
 • ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் நேரடி மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
 • ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் இடையே உள்ள வேறுபாடு.

 

வகுப்பு ஜிம்னோஸ்பெர்மே (சைக்கடுகள், கோனிஃபெர்கள் மற்றும் ஜிங்கோக்கள்) வகுப்பு ஆஞ்சியோஸ்பெர்மே (பூக்கும் தாவரங்கள்)
1.   சைலத்தில் குழாய்கள் கிடையாது. டிரக்கீடுகள் மட்டுமே உள்ளன. (நீட்டேவிஸ் தவிர) ஃ புளோயத்தில் துணை செல்கள் கிடையாது சைலத்தில் குழாய்கள் உள்ளன. ஃபுளோயத்தில் துணை செல்கள் உள்ளன.
2.   கூம்புகள் காணப்படும் இவற்றில் ஸ்போரகங்களும் ஸ்போர்களும் உருவாகும்.  மலர்களை உருவாக்கும் இதில் ஸ்போரகங்களும் ஸ்போர்களும் உருவாகும்.
3.   விதைகள் திறந்தவை. அதாவது விதைகள் சூல்பைக்குள் மூடப்படவில்லை  விதைகள் சூல் பைக்குள் மூடப்பட்டுள்ளன
4.   சூல்பை இல்லாததால் கனி கிடையாது  கருவுறுதலுக்குப் பின் சூல்பை கனியாக மாறுகிறது.

  ஆஞ்சியோஃஸ்பெர்ம்ஸ் (Angiosperms):

 • முடிய விதைத் தாவரங்கள் கொண்ட தாவரங்கள் ஆஞ்சியோஃஸ்பெர்ம்ஸ் (Angiosperms) என்று பெயர்.
 • ஆஞ்சியோஃஸ்பெர்ம்கள் இரண்டு வகுப்புகளாக பிரிக்கலாம். அவை டைகாட் மற்றும் மானோகாட்.
 • இரு சொல் பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் கார்ல் லின்னேயஸ்.
 • பெந்தம் மற்றும் ஹிக்கர் இருவரும் இயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினர்.
 • சார்லஸ் டார்வின் என்பவர் பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டை உருவாக்கினார்.
 • ஸ்பிசியஸ் ப்ளாண்டாரம், ஜெனிரா ப்ளான்ட்டாரம் என்ற நூலை கார்ல் லின்னேயஸ் வெளியிட்டார்.
 • சிற்றினங்களில் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்.
 • தாவரங்களை வகைப்படுத்துவதற்கு வகைப்பாட்டியல் என்று பெயர்.
 • ஆஞ்சியோஸ்பெர்ம்களின் மிகவும் உயரமான மரம் யூக்கலிப்டஸ்.
 • ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் மறைமுக மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
 • ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சூலிலை, மெகாஸ்போரிலை எனப்படும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.