rabindranath tagore biography

பிராணம் குருதேவ் – தாகூர் எனும் தலைமகன் வரலாறு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

p02qbjh2

 

  • கவியரசர் தாகூரின் நினைவு ஆகஸ்ட் 7 .வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

 

  • அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .

 

  • அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

 

  • ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .

 

  • இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;

 

  • நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .

 

  • அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே .

 

  • என் ஆடைகள்,ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

 

LATESTS GOVERNMENT JOBS