இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி

  • நம் தாய்நாட்டுக்கு 1947 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் இந்த நாளில்தான் சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்த ஆங்கிலேய ஆட்சி நீக்கப்பட்டு அரசியல் அதிகாரங்கள் இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைத்து.
  • அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைப்படி 1946 ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது தற்போது நடைமுறையில் உள்ள இந்திய அரசியலமைப்பு 1949 ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் அரசியலைமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது.
  • ஆங்கிலேயர் இயற்றிய பல்வேறு சட்டங்களின் வெளிப்பாடே இந்திய அரசியலமைப்புச் சட்டமாகும்.

ஒழுங்கு முறைச் சட்டம் (1773)

 

  • இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒழுங்கு முறைச்சட்டம் மிக முக்கியமானது ஏனெனில் இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது பிரிட்டிஸ் நாடாளுமன்றம் தனது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக அச்சட்டம் அமைந்தது. அதன்படி.
  1. இச்சட்டம் கம்பெனி ஆட்சிக்காக எழுதப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அடங்கிய அரசியலமைப்பு ஒன்றை வழங்கியது.
  2. வங்காள ஆளுநரை முதல் தலைமை ஆளுநராக நியமித்து வாரன் ஹேஸ்டிங் முதல் தலைமை ஆளுநரானார்.
  3. கல்கத்தாவில் ஒரு தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.