விநாடிக்கு 12 மீட்டர் வேகம் : 10 மீட்டர் இடைவெளியில் தங்கம் வென்ற உசேன் போல்ட்! - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

விநாடிக்கு 12 மீட்டர் வேகம் : 10 மீட்டர் இடைவெளியில் தங்கம் வென்ற உசேன் போல்ட்!

  • பெய்ஜிங், லண்டன், ரியோ என ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்த ஜமைக்காவின் உசேன் போல்ட், வெறும் 10 மீட்டர் இடைவெளியில்தான் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லினை முறியடித்தார். ஜஸ்டின் காட் லின் 9.89 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவின் ஆன்ட்ரி டி கிராசி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

 

  • இந்த வெற்றி குறித்து உசேன் போல்ட் கூறுகையில், ”ஹாட்ரிக் தங்கம் வென்றது மகிழ்ச்சிதான். இறுதிப் போட்டியில் அதிவேகமாக ஓடவில்லை என்றாலும் முதலிடம் பிடித்தேன். எனது உலக சாதனையான 9.58 விநாடிகளுக்கு அதிகமாகதான் தற்போது இலக்கை அடைந்திருக்கிறேன். அரை இறுதி சுற்றுக்கும் இறுதிப் போட்டிக்கும் குறைந்த காலஇடைவெளிதான் இருந்தது. எனது வேகம் குறைய இது காரணமாக இருந்திருக்கலாம். 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதிப்பேன். 200 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 19 விநாடிகளில் அடைவதே குறிக்கோள்” என்றார்.

  • ரியோ 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வது உசேனுக்கு சவால் நிறைந்ததாகவே இருந்தது. முதலில் உசேன் போல்ட்டுக்கு ஸ்டார்ட்டிங் சரியாக அமையவில்லை. பிற வீரர்களை விட 0.155 விநாடிகளுக்குப் பிறகுதான் உசேனுக்கு ஸ்டார்ட்டிங் கிடைக்கிறது. முதல் 10 மீட்டரில் மற்ற வீரர்களுக்கும் உசேனுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தென்படுகிறது. உசேனின் போட்டியாளரான அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் 4வது லேனில் ஓடுகிறார். உசேனுக்கும் காட்லினுக்கும் இடையே கூட நல்ல இடைவெளி இருக்கிறது.

 

  • இந்த சமயத்தில்தான் மில்லி செகண்டுக்கும் குறைவான நேரம்தான் உசேனின் கால்கள் ட்ராக்கில் பதிகின்றன. உந்து சக்தி கிடைப்பதற்காக அவர் மற்ற வீரர்களை விட மிக குறைந்த நேரமே தரையில் கால் பதிக்கிறார். காட்லின் உள்பட மற்ற வீரர்கள் உந்து சக்திக்காக ட்ராக்கில் அதிக நேரம் கால் பதித்து கொண்டிருக்க, உசேன் பறக்கவே ஆரம்பித்து விட்டார். அந்த வகையில், உசேனுக்கு 60 முதல் 80 மீட்டருக்கான இடைவெளியில்’ டாப் ஸ்பீட்’ கிடைக்கிறது. அதாவது விநாடிக்கு 12 மீட்டர்கள். இதுதான் உசேனின் உச்சபட்ச வேகம். இந்த சமயத்தில் போல்ட்டின் கால்கள் தரையிலேயே இல்லை.தொடர்ந்து 8.76 விநாடியில் காட்லினை முந்தும் உசேன் 9.81 விநாடிகளில் இலக்கை எட்டுகிறார். ரேஸ் அத்துடன் ஓவர்!

 

  • இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த காட்லின் கடைசிக்கட்டத்தில் தான் செய்த தவறால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தி அடைய நேரிட்டது. கடைசிக்கட்டத்தில் முன்னால் சென்ற வீரர்களை அடுத்தடுத்து பின்னுக்குத் தள்ளிய போல்ட், கடைசி 10 மீ ட்டர் தூரத்தில் ஜஸ்டின் காட்லினையும் முறியடித்து தங்கம் வென்று அசத்தி விட்டார்.

 

  • பதக்கம் வென்றதும் ரசிகர்கள் மததியில் சென்ற உசேன் போல்ட், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர், மைதானத்தை வலம் வந்த போல்ட், தனது ஸ்டைலில் போஸ் கொடுக்க அப்போது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.