பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி

  • ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது.

 

  • பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது.

 

  • அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுடிந்தது. 49.44 விநாடி களில் அவர் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். மில்லரின் இந்த எதிர்பாராத செயலால் அலிசன் பெலிக்ஸால் இரண்டாம் இடமே பிடிக்கமுடிந்தது. அவர் பந்தய தூரத்தை 49.51 விநாடிகளில் கடந்தார். இந்த ஒலிம்பிக்கில் பஹாமாஸ் இதுவரை ஒரு பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. அந்த ஒன்றும் தங்கமாக அமைந்தது.

 

வெற்றி குறித்து மில்லர் கூறும்போது,

 

  • ‘‘இதற்கு முன்னர் இதுபோன்று நான் செய்தது இல்லை. தரையில் விழுந்தபோது நான் தான் வெற்றி பெற்றேன் என்பதை கூட அறியாமல் இருந்தேன். இது எப்படி நிகழ்ந்தது என்பதே தெரியவில்லை. தங்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது. தரையில் இருந்த தருணம் அற்புதமான உணர்வு’’ என்றார்.