Global Iodine Deficiency Day

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

Image result for Global Iodine Deficiency Day OCT 21

 

 • உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் ஒழுங்கின்மை தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது.

 

 • மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்! இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது.
  அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.

 

 • மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது.றைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.முதலில் அயோடின் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.இது ஒரு தனிமம்.
  அயோடினை முதன் முதலாக கண்டு பிடித்தவர் பிரெஞ்சு விஞ்ஞானி பெர்னார்டு கோட்டிய்ஸ் ஆவார். ஆனால், அதனை ஒரு தனிமம் என்று கண்டறிந்தவர் லூசர்ச் என்பவர்.
  அயோடின் இயற்கையில் தனிமாக கிடைப்பதில்லை. கடற்பாசியில் அதிக அயோடின் சத்து உள்ளது. அதை மொத்தமாக சேகரித்து, எரித்து அந்தச் சாம்பலில் இருந்துதான் அயோடினை பிரித்தெடுக்கிறார்கள். காலிச் என்ற வெடியுப்புத் தாதுவிலிருந்தும் அயோடின் பிரித்தெடுக்கப்படுகிறது.

 

 • மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான்!சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது.
  மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
  இவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.

 

 • நமது உடலில் இயற்கையாகவே அயோடின் உள்ளது. ஆனால், இந்தச் சத்து பற்றாக்குறையின் போது நமது உடலுக்கு அயோடின் சேர்ப்பது அவசியமாகிறது.அறிகுறி காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது,மலட்டுத் தன்மை, முடி உதிர்வு,சருமத்தில் வறட்சி, குளிர் / வெப்பத்தை தாங்க முடியாமை,களைப்பு,மனச் சோர்வு,அதிக வியர்வை,
  படபடப்பு,எப்போதும் தூக்க கலக்கம்,மலச்சிக்கல் / வயிற்றுப் போக்கு,கழுத்தில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.

 

 • ஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.
  இந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.

 

 • பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயாகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, சுறுசுறுப்பு, பசியின்மை, குறைவான இருதயத் துடிப்பு, குறைந்த வளர்சிறை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.

 

 • குழந்தைகளை இக்கோளாறுகள் அதிகமாக பாதிக்கின்றன. அவர்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் குறைவாயாக வேலை செய்தால் அயோடின் குறைவு உருவாகும். அதனால், கிரெட்டினிசம் என்னும் நிலை உண்டாகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போதிய அளவு மன வளர்ச்சி இருப்பதில்லை. அயோடின் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவாக இருக்கும்.

 

 • இதனால், அவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இருக்காது. இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். பாதிப்பு அதிகரிக்கும் போது மனைநிலை பாதிப்பு ஏற்படும். இந்த அயோடின் பற்றாக்குறை மேலும் கடுமையான விளைவுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிரச்னையின் ஆரம்பக் கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம்.சிகிச்சை அயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.

 

 • அயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோடினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

 • தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]