மரபியல் Genetics

மரபியல் Genetics

  •  கலப்பினம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்த இரு வேறுபட்ட தாவரங்களை கலப்பு செய்து புதிய பண்புகள் கொண்ட தாவரத்தை தோற்றுவிப்பது.
  • மரபுகள் ஒரு சந்த்தியிலிருந்து மற்றொரு சந்த்திக்கு கடத்தப்படுதலும் இதில் ஏற்படும் மாறுபாடுகளையும் பற்றி படிப்பது மரபியல் ஆகும்.
  • மரபியலின் தந்தை ஜொகான் கிரிகர் மெண்டல்
  • கிரிகர் ஜோகன் மெண்டல் மரபியலின் தந்தை ஆவார்.
  • மெண்டல் தன் சோதனைக்காக பட்டாணி செடியை தேர்ந்தெடுத்தார்.
  • மெண்டல் தனது கோட்பாட்டில் தனித்து பிரிதல் விதி, சார்பின்றி ஒதுங்குதல் விதி விளக்கினார்.

தனித்து பிரிதல் விதி:

  • ஒரு பண்பு கலப்பு உயிரியல் உள்ள இரண்டு அல்லீல்கள் ஒன்றாக கலப்பதில்லை கேமிட்டுக்களை உண்டாக்கும்போது அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியும் இதுவே தனித்து பிரிதல் விதி.

சார்பின்றி ஒதுங்குதல் விதி:

  • இதன்படி கேமிட்டுகள் உண்டாகும் போது இரு பண்பு கலப்பு உயிரியலுள்ள ஒவ்வொரு ஜீன் ஜோடியும் பாரம்பரியம், மற்றொரு ஜோடியை சார்ந்தது அல்ல.

அல்லீல்கள்:

  • ஒரு பண்பில் இரு மாறுபட்ட வெளிப்பாடுகள் அல்லது புறத்தோற்றங்களை கட்டுப்படுத்தும் ஜீன் ஜோடிகளுக்கு அல்லீல்கள் என்று பெயர்.

மறைத்தல்:

  • மறைத்தலுக்கு காரணமான ஜீன் மறைக்கும் ஜீன் என்றும், மற்றொரு ஜீன் மறைபடும் ஜீன் என்றும் இதற்கு மறைத்தல் என்று பெயர்.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.