General Tamil For TNPSC

General Tamil For TNPSC

Image result for GENERAL TAMIL

General Tamil For TNPSC

  • Tnpsc  தேர்வினைப் பொருத்தவரை தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பொதுத்தமிழ் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.
  • பொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
  • பொதுத் தமிழில் வாங்கும் மதிப்பெண்கள் நம் வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே பொதுத் தமிழில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • பொதுத் தமிழை நாம் கவனமாக புரிந்து படிக்க வேண்டும். ஏனென்றால் புரிந்து படித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.

[எ – டு] சென்ற குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.

 “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை”

​இதில் மகடூஉ என்பது :பெண்.

இந்தக் கேள்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது. ஆனால் மகடூஉ என்றால் பெண் என்று அதில் தரப்படவில்லை. கடல் பயணம் பெண்களுக்கு உகந்தது அல்ல என்றவாறு உள்ளது. கேள்வி மறைமுகமாக கேட்கப்பட்டு உள்ளது. எனவே நாம் கவனமாக புரிந்து படித்தல் அவசியம்.

இப்போது எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள்  கேட்பார்கள் என்று பார்போம்.

​1] இலக்கணம் [ 25 முதல் 35 ]

2] செய்யுள் [ 30 முதல் 35 ]

3] உரைநடை [ 30 முதல் 35 ]

TNPSC  தேர்வில்  குரூப் 2, குரூப் 2எ, குரூப் 4, வி.ஏ.ஒ  ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ்  பகுதியில்  100 வினாக்கள்  கேட்கப்படுகின்றன. 100 வினாக்களில் 85 வினாக்கள்  6 முதல் 12ம் வகுப்பு  தமிழ் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. மீதமுள்ள 15 வினாக்கள் TNPSC பொதுத்தமிழ்  பாடத்திட்டத்துடன்  தொடர்புடைய  வினாக்கள். நாம் 85 மதிப்பெண்கள்  எளிதாக  வாங்கி விடலாம். ஆனால்  மீதமுள்ள 15 மதிப்பெண்கள் வாங்குவது கடினம். அவ்வாறு கடினமாக கேட்கப்பட்ட TNPSC வினாக்களை பார்ப்போம்.

1] தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்? 

விடை: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். [GROUP4 – 2014]

2] ‘ஜல்லிக்கட்டு’ என்னும் எருதாட்டத்தை வைத்து ‘வாடிவாசல்’ என்னும் நாவலை எழுதியவர்?   

விடை: சி.சு.செல்லப்பா.[GROUP 4 – 2014]

3]மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த ‘ஞானசாகரம்’ இதழைத் தூய தமிழில் எங்கனம் பெயர் மாற்றம் செய்தார்?

​விடை: அறிவுக்கடல். [குரூப் 4 – 2014].

இதேபோல்  ஒவ்வொரு tnpsc தேர்விலும் 15 வினாக்கள்  கேட்கப்படுகின்றன.   அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

​1.தமிழ் இலக்கிய வரலாறு.

[இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், உரைநடை, புதுக்கவிதை]

இயற்தமிழ்

i] சங்க காலம்.[ எட்டுத்தொகை, பத்துப்பாட்டு]

ii] சங்கம் மருவிய காலம்.[ நீதி நூல்கள்]

iii] பக்தி காலம் [சைவம், வைணவம் – பல்லவர்].

iv] காப்பியக் காலம் [சோழர்கள்]

v] சிற்றிலக்கிய  காலம் [நாயக்கர்].

vi] உரைநடைக் காலம் [ஐரோப்பியர்].

TNPSC GROUP 4 SYLLABUS

பகுதி அ

1.பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் – நூல் தேர்வு

2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்

3.பிரித்தெழுதுக

4.எதிர்ச்சொல்

5.பொருந்தாச் சொல்

6.பிழை திருத்தம் – சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்

7.ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம்

8.ஒலி வேறுபாடு அறிதல்

9.ஓரெழுத்து ஒருமொழி

10.வேர்ச் சொல்லைத் தேர்தல்

11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்

12.அகர வரிசையில் அடுக்குதல்

13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

14.பெயர்சொல்லின் வகையறிதல்

15.இலக்கண குறிப்பு

16.விடைக்கேற்ற வினா அறிதல்

17.எவ்வகை வாக்கியம் என அறிதல்

18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை

19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.

20.எதுகை, மோனை, இயபு

பகுதி – ஆ

இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( 19 அதிகாரம் மட்டும் )

அன்பு,பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.

2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,

முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3.கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.

4.புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5.சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6.பெரிய புராணம் – நாலாயிரந்திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7.சிற்றிலக்கியங்கள்

திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது -நந்திக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடு தூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8.மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )

9.நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஸ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி – இ

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2.மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.

3.புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.

4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி – மு.வ. – அண்ணா -ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.

5.நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்.

6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்

7.கலகள் – சிற்பம் -ஓவியம் -பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்

8.தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.

9.உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வைய்யாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.

10.ஊ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.

11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12.ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13.பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் -அம்பேத்கர் -காமராசர் – சமுதாயத்தொண்டு .

14.தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

15.உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்

16.தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

17.தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு  (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் )

18.தமிழர் வணிகம் –  தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.

19.உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

20.சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.