Deal Score0

கூழ்மங்கள்     

  • உண்மைக் கரைசல் மற்றும் தொங்கல் ஆகிய இரு நிலைமைகளுக்கு இடைப்பட்ட நிலைமை கூழ்மநிலை எனப்படும். கரைப்பானில் பரவியிருக்கும் சேர்மத்தின் துகள்களின் விட்டத்தின் அளவு 10AO முதல் 2000AO  வரை இருந்தால் அந்த அமைப்பு கூழ்மக் கரைசல் எனப்படும்.

பிரிகை நிலைமை                                              

  • கூழ்மத் துகள்களாக விரவியுள்ள சேர்ம்ம்மானது பிரிகை நிலைமை எனப்படும்.

பிரிகை ஊடகம்

  • கூழ்மத் துகள்கள் விரவியுள்ள அடுத்த தொடர் நிலைமையானது பிரிகை ஊடகம் எனப்படும்.
  • கரைப்பான் கவர் கூழ்மங்கள்                                     கூழ்மத்தில் உள்ள பிரிகை நிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே அதிக கவர்ச்சி விசை காணப்பட்டால் அதற்கு கரைப்பான் கவர் கூழ்மங்கள் என்று பெயர்.
  • கரைப்பான் எதிர் கூழ்மங்கள் கூழ்மத்தில் உள்ள பிரிகை நிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே மிகக் குறைந்த கவர்ச்சி விசை காணப்பட்டால் அதற்கு கரைப்பான் எதிர் கூழ்மங்கள் என்று பெயர்.
  • கூழ்மமாக்கல் கரைசலில் உள்ள மின்பகுளியின் காரணமாக, வீழ்படிவான பொருள் கூழ்மக் கரைசலாக பரவும் நிகழ்ச்சி கூழ்மமாக்கல் எனப்படும். அம் மின்பகுளி கூழ்மமாக்கும் காரணி எனப்படும்.
  • கூழ்மப் பிரிப்பு கூழ்மத்தில் உள்ள அதிக அளவு அயனிகளை சவ்வின் வழியே நீக்கும் செயல் கூழ்மப் பிரிப்பு எனப்படும்.
  • ஹெல்ம் ஹோல்ட்ஸ் இரட்டை அடுக்கு
  • கூழ்மத்துகளைச் சுற்றியுள்ள இரட்டை எதிரெதிர் மின்சுமை அடுக்கு ஹெல்ம் ஹோல்ட்ஸ் இரட்டை அடுக்கு எனப்படும்.
  • மின் முனைக் கவர்ச்சி () காட்டோபோரசிஸ்
  • கூழ்மத்துகள்கள் மின்னோட்டத்தைச் செலுத்தும் போது மின் முனையை நோக்கி நகரும் செயல் மின் முனைக் கவர்ச்சி அல்லது காட்டோபாரசிஸ் என்றழைக்கப்படுகிறது.
Click Here To Get More Details