Gate Exam Notification - 2017

GATE – 2017 தேர்வு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

GATE – 2017 தேர்வு

 

 

போட்டித் தேர்வு

  • புகழ்பெற்ற நிறுவனங்களில் Tech., Ph.D. படிக்கலாம் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகள் பெறலாம்
  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள IIT நிறுவனங்கள், Indian Institute of Science நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் 23 விதமான பொறியியல், அறிவியல் பாடப்பிரிவுகளில்Tech., Ph.D. படிப்புகளுக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வே Gate (Graduate Aptitude Test for Engineering) தேர்வாகும். கேபினட் செகரட்டேரியட், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகள் பெறவும் இத்தேர்வின் தேர்ச்சி தகுதியாகக் கொள்ளப்படுகிறது.
  • இத்தேர்வை மத்திய அரசின் மனிதவளத் துறையின் கீழ் செயல்படும், நேஷனல் கோ ஆர்டினேசன் போர்டு, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் நிறுவனம், பெங்களூரூ, மும்பை, டெல்லி, கௌஹாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய 8 இடங்களில் செயல்படும் IIT நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. 2017- Gate தேர்வுக்கான பிரதானப் பொறுப்பை ஏற்றிருப்பது ரூர்க்கி

 

கேட் தேர்வை யாரெல்லாம் எழுதலாம்?

  • E., B.Tech., B.Sc. B.Arch., B.S., டிப்ளமோ எஞ்சினியரிங் முடித்தவர்களும், இப்படிப்புகளில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் எழுதலாம்.
  • அறிவியல் பிரிவுகள், கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் பாடங்களில்Sc., M.A. MCA படித்து தேர்ச்சி பெற்றவர்களும் எழுத முடியும். AMIE, AMICE தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். வயது வரம்பு இல்லை.

 

தேர்வு எந்த வகையில் நடக்கும்?

  • Gate தேர்வு 23 பாடங்களில் நடத்தப்படும். விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு தாளை மட்டும் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

 

23 பாடங்கள்

  • ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங் (AE)
  • அக்ரிகல்ச்சுரல் எஞ்சினியரிங் (AG)
  • ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் (AR)
  • பயோ டெக்னாலஜி (BT)
  • சிவில் எஞ்சினியரிங் (CE)
  • கெமிக்கல் எஞ்சினியரிங் (CH)
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி (CS)
  • கெமிஸ்ட்ரி (CH)
  • எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் எஞ்சினியரிங் (EC)
  • எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் (EE)
  • ஈக்காலஜி அண்ட் எவாலூசன் (EM)
  • ஜியாலஜி அண்ட் ஜியோபிசிக்ஸ் (GG)
  • இன்ஸ்ட்ருமென்டேசன் எஞ்சினியரிங் (IN)
  • மேத்தமேட்டிக்ஸ் (MA)
  • மெக்கானிக்கல் எஞ்சினியரிங் (ME)
  • மைனிங் எஞ்சினியரிங் (MN)
  • மெட்டலார்ஜிக்கல் எஞ்சினியரிங் (MT)
  • பெட்ரோலியம் எஞ்சினியரிங் (PI)
  • டெக்ஸ்டைல் எஞ்சினியரிங் அண்ட் பைபர் சயின்ஸ் (IF)
  • பிசிக்ஸ் (PH)
  • புரடக்சன் அண்ட் இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் (PI)
  • எஞ்சினியரிங் சயின்சஸ் (XE)
  • லைஃப் சயின்சஸ் (XL)
  • இத்தேர்வு, 3 மணி நேரம் நடக்கும். ஆன்லைன் வழியில் சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் 100 மதிப்பெண்களுக்கான 65 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் குறிப்பிட்ட பாடத்தின் இளநிலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

விண்ணப்பிக்கும் முறை

  • http://appsgate.iitr.ernet.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், பெண்களுக்கு ரூ.750. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750, பொதுப்பிரிவினருக்கு ரூ.1500. இக்கட்டணத்தை நெட் பேங்கிங், ஈ-செலான் வழியாக செலுத்தலாம்.

 

முக்கிய நாட்கள்

  • ஆன்லைன் விண்ணப்பம் : தொடக்கம் : 1.9.2016
  • விண்ணப்பிக்க இறுதிநாள்: 4.10.2016
  • அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்ய: 15.1.2017
  • தேர்வு நடக்கும் நாட்கள் : 4.2.2017, 5.2.2017, 11.2.2017, 12.2.2017
  • தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 27.3.2017