வாயுநிலை

வாயுநிலை (Gaseous  State)

வாயுக்களின் சிறப்பியல்புகள்:

  • வாயுக்கள் நிலையான உருவமும், கன அளவும் பெற்றிருப்பதில்லை. அவைகள் அடைத்து வைத்திருக்கும் கொள்கலனின் உருவத்தையும் கன அளவையும் ஒத்துள்ளன.
  • வாயுக்கள் தம்முடன் தொடர்பிலுள்ள பரப்பை அழுத்தம் தன்மையுமான இவ்வழுத்தம் எல்லாத் திசைகளிலும் சமமாகவே உள்ளது.
  • மாறா அழுத்தத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் வாயுக்கள் பெருக்கமடைகின்றன.

வாயு விதிகள்:

  • சற்றுக் குறைந்த அழுத்தத்திலும் அதிக வெப்பநிலையிலும் எல்லா வாயுக்களும் மூன்று எளிய விதிகளுக்கு உட்படுகின்றன.
  • வெப்பநிலை அல்லது அழுத்தம் மாறுபடும்பொழுது வேதி அமைப்புகளால் மாற்றம் அடையாத வாயுக்களுக்கே இவ்விதிகள் பொருந்தும்.

பாயி்லின் விதி (Boyle’s law)

  • பாயி்லின் விதி என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,

P  ∞  1/V, ( மாறாத வெப்பநிலையில் ) அல்லது

PV =  k, (ஓர் மாறிலி)

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.