மாற்றுத்திறனாளிகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for physically handicapped

 

  • மாற்றுத்திறனாளிகளை பாரபட்ச மாக நடத்துவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங் களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

 

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில் மாநிலங் களவை நேற்று காலையில் கூடியதும், பூஜ்ஜிய நேரத்தின் போது மாற்றுத்திறனாளிகள் உரிமை மசோதாவை (2014) உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குலாம் நபி ஆசாத், மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

 

  • இதற்கு பதில் அளிக்கும் வகையில், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “இந்த மசோதா உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்” என்றார். இதையடுத்து இந்த மசோதா மீது குறுகியகால விவாதம் நடை பெற்றது. பின்னர் குரல் வாக்கு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

  • மாற்றுத் திறனாளிகள் சட்டத் துக்கு (1995) மாற்றாக, சில திருத்தங்களுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மாற்றுத் திறனாளிகளை பாரபட்சமாக நடத்துவோருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேலும் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அபராதமும் விதிக்க முடியும்.

 

  • அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது.

 

  • தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான வரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் அவற்றை 21 ஆக உயர்த்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மன நல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல் பால்சி, தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றில் இருந்து ஐந்து சதவிகிதமாக அதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கான அதிகார வரம்பும் அதிகரிக்கப்பட உள்ளது.