Education News

மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது.

சென்னையில் SSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்
  • மத்திய அரசு பணிகளான Customs, CBI, Income Tax போன்ற துறைகளில் 10,000-க்கும் அதிகமான காலியிடங்களுக்காக Staff Selection Commission (SSC) தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுதுபவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்காக சிறப்பு பயிற்சியளிக்க காத்திருக்கிறது விகடன்.
  • விகடன் பிரசுரம், SSC MAX Academy நிறுவனத்துடன் இணைந்து இலவச பயிற்சி முகாம் ஒன்றை இம்மாதம் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை (10 மணி முதல் மதியம் 2 மணி வரை) சென்னை எத்திராஜ் கல்லூரி அரங்கில் நடத்தவுள்ளது.

SSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் - 24.11.2019

  • இதில் கலந்துகொள்வதற்கான வழிமுறைகள் மேலே உள்ள படத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உங்களுக்கு வழிகாட்டவிருக்கின்றனர்.
  • இந்த நிகழ்ச்சியில் ஊக்க உரை வழங்கவிருக்கும் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர், சங்கர் கணேஷ் கருப்பையா IRS கூறுகையில், “UPSC, TNPSC தேர்வுகளோடு ஒப்பிடும்போது இந்த SSC தேர்வை தமிழ்நாட்டிலிருந்து குறைவான நபர்கள்தான் எழுதுறாங்க. அதற்குக் காரணம், இதுபற்றி பலருக்கும் தெரியாததுதான். TNPSC தேர்வுகளை அதிகம் பேர் எழுதுவதற்குக் காரணம், அதுபற்றி இங்கு பலருக்கும் நன்கு தெரியும். மேலும், அதிகம்பேர் அதில் எழுதி தேர்ச்சி பெறுவதைப் பார்க்கும்போது அது எளிமையானது, நம்மாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் வருகிறது. அதுதொடர்பான வழிகாட்டல்கள், விரிவான தகவல்கள்னு இங்க அதற்குத் தயாராவதற்குத் தேவையான நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் கிடைக்குது. ஆனால், SSC-க்கு அப்படி இல்ல. மேலும், TNPSC-ஐ தமிழிலும் எழுதலாம். ஆனால், SSC அப்படி இல்ல. அதேபோல UPSC-குத் தயாராகும் பலபேர் TNPSC-க்கும் தங்களை தயார் பண்ணிப்பாங்க. அதற்கு அந்த இரண்டு தேர்வு முறைகளும் ஓரளவுக்கு ஒத்துப்போறதும் ஒரு காரணம். ஆனால், SSC அப்படியல்ல. இது வேற பேட்டர்ன். அதனால இதுக்கு தனியா தயாராகணும். இவையெல்லாம் பலருக்கும் இந்தத் தேர்வுக்குத் தயாராகத் தயக்கம் வருவதற்கான காரணங்கள்.
  • மற்றபடி இதுவும் UPSC-ஐ விடவும் எளிமையான தேர்வுதான். வங்கி, ரயில்வே தேர்வுகள் போலத்தான் இதுவும். இதன்மூலம் தேர்வாகி வரும் நபர்கள் இன்ஸ்பெக்டர், அசிஸ்டன்ட் கமிஷனர் முதல் IRS வரையிலும் பதவி உயர்வு பெறமுடியும். வருமானவரித்துறை, சுங்கவரித்துறை எனப் பல்வேறு அரசு துறைகளில் பதவி வகிக்க முடியும். அதனால், அரசு வேலைகளுக்குத் தயாராகும் மாணவர்கள் SSC தேர்விலும் தயக்கமின்றி கவனம் செலுத்தலாம். இந்தப் பயிற்சி வகுப்பில், SSC-க்கு மனரீதியாக எப்படித் தயாராவது, இதிலிருக்கும் வேலைவாய்ப்புகள், பயிற்சிக்கான வழிமுறைகள் போன்றவை குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்” என்கிறார்.
  • நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றவிருக்கும் மத்திய கலால், சேவை மற்றும் சுங்கவரித்துறை தீர்வாணையத்தின் துணைத்தலைவர், சி.ராஜேந்திரன் IRS கூறுகையில்,“எந்தத் தேர்வானாலும் எந்தப் போட்டியானாலும் நாம் முதலில் தயார் செய்ய வேண்டியது நம் மனதைதான். நம்முடைய இலக்கு எதுவென தீர்மானித்துவிட்டால் பின்னர் அதை அடைவது எளிது. அந்த இலக்கு SSC தேர்வு என நீங்கள் தேர்வு செய்துவிட்டீர்கள் என்றால், அதற்கடுத்து நீங்கள் தாராளமாக அதற்கான பயிற்சிகளைத் தொடங்கலாம். நம்முடைய பயிற்சியை நாம் எப்படித் தொடங்க வேண்டும்.
  • நம்முடைய குறைகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கு திருக்குறளிலேயே நிறைய நல்ல உதாரணங்கள் உண்டு. அவற்றை உங்களுடன் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறேன். அவற்றைப் பின்பற்றினாலே வெற்றி நம் வசம் வந்துவிடும். இந்தத் தேர்வு மிக கடினமானது, இதற்கு நன்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் எனப் பல்வேறு தயக்கங்கள் தேர்வு எழுதுபவர்களிடம் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் நாம் எளிதாகக் கடந்து வந்துவிடலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் நல்ல பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, இந்த வாய்ப்பை யாரும் தவறவிடக் கூடாது” என்கிறார்.
  • மேலும் போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்றுநர், டாக்டர் சங்கர சரவணன், SSC தேர்வு பயிற்சியாளர் மற்றும் SSC Max அகாடமியின் கௌரவ இயக்குநர், பா.கலைச்செல்வன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker