அயனிகள் உருவாதல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அயனிகள் உருவாதல்:

  • ஒரு அணு எலக்ட்ரான்களை இழந்து எண்மை அமைப்பைப் பெறும்போது, அது நேர்மின் அயனியாகிறது. அதே போல் ஒர் அணு எண்ம அமைப்பைப் பெற எலக்ட்ரான்கள் ஏற்கும்போது எதிர்மின் அயனி உருவாகிறது.
  • வாயு நிலையில் உள்ள மின்சுமையற்ற ஒர் அணுவில் உள்ள எலக்ட்ரானை நீக்கி, அதை நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவையான ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல் எனப்படும்.
  • வாயு நிலையில் உள்ள மின்சுமையற்ற ஒர் அணுவுடன் எலக்ட்ரானை சேர்த்து அது எதிர்மின் அயனியாக மாறும் பொழுது ஆற்றல் வெளியிடப்படுகிறது. அந்த ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் என அழைக்கப்படுகிறது.
  • எளிதாக எலக்ட்ரான்களை நீக்கி நேர்மின் அயனியாக மாறும் தன்மையுடைய அணுக்களைக் கொண்ட தனிமங்கள் நேர்மின் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • உதாரணமாக தொகுதி I மற்றும் II-ல் உள்ள கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்கள் இப்பண்பைப் பெற்றுள்ளன* எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின் அயனியாக மாறும் தன்மையுடைய தனிமங்கள் எதிர்மின் தனிமங்கள் எனப்படுகின்றன.
  • தொகுதி I உலோகங்கள் அனைத்தும் வெளிக் கூட்டில் உள்ள எலக்ட்ரானை இழந்து, அருகிலுள்ள மந்த வாயுக்களின் எல்க்ட்ரான் அமைப்பைப் பெற முயல்கின்றன. எனவேதான் அனைத்து கார உலோகங்களும் அதிக வினைபுரியும் தன்மையைப் பெற்றுள்ளன.
  • 17-வது தொகுதியில் உள்ள தனிமங்கள் அதன் அருகிலுள்ள மந்த வாயுக்களை விட ஒர் எலக்ட்ரான் குறைவாகப் பெற்றுள்ளன. எனவே அவை உலோகங்களிலிருந்து ஒர் எலக்ட்ரானைப் பெற்று எதிர் எலக்ட்ரானைப் பெற்று எதிர்மின்சுமை உடைய அயனிகளாக மாறுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]