கண் அறுவை சிகிச்சை செய்த முதல் ரோபோ!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for First robot made ​​eye surgery !

  • முதல்முறையாக ரோபோ மூலமாக, ஒருவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் பிரிட்டன் மருத்துவர்கள். இன்று அனைத்து துறைகளும் இயந்திர மயமாக மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் தற்பொழுது இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மனிதனுடைய தேவைகள் குறைக்கப்பட்டு இயந்திரங்கள் பயன்பாடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரோபோக்களின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எல்லா துறைகளிலும் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போது மருத்துவத் துறையிலும், இந்த ரோபோக்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

 

  • இந்த அறுவை சிகிச்சை ஆக்ஸ்போர்டு ஜான் ரட்க்ளிஃப் மருத்துவமனையில் நடந்துள்ளது. ஜாய்ஸ்டிக் மூலம் இயங்கும் ரோபோவைக் கொண்டு, நோயாளியின் கண்ணில் இருந்து, ஒரு மில்லிமீட்டரில் நூற்றில் ஒரு பகுதி அடர்த்தி கொண்ட ஒரு படலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.. ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் துணை பாதிரியாராக பணியாற்றுபவர் தான் 70 வயதான வில்லியம் பீவெர். இவருக்குத் தான் முதன்முதலில் இயந்திரத்தை கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் தனக்கு பார்வைக் குறைபாடு தீர்க்கப்பட்டு கண் நன்றாகத் தெரிவதாகவும், அவருடைய பார்வை திறந்தவெளியில் கண்ணாடியால் ஆன அறையில் இருந்து பார்ப்பது போன்றே உள்ளது, என்றும் கூறியுள்ளார்.

 

  • இது குறித்து சிகிச்சை அளித்த குழுவில் ஒருவரான பேராசிரியர் ராபர்ட் மேக்லரேன், கூறுகையில், “எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் கண் அறுவை சிகிச்சையின் வருங்காலத்தைத் தான் பார்த்திருக்கிறோம். தற்போதுள்ள லேசர் ஸ்கேனர்கள் மற்றும் நுண்ணோக்கிகள் மூலம் கண்களில் உள்ள குறைபாடுகளை நுண்ணிய அளவிலேயே பார்க்க உதவும். ஆனால் இந்த ரோபோ மூலம் மனிதனின் கைகளால் செய்யமுடியாத பல விஷயங்களை செய்ய முடியும். கண்ணின் உட்பகுதிகளை மிகவும் துல்லியமாக பார்க்கவும் முடியும். கண் அறுவை சிகிச்சைகளில் நாங்கள் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியிருக்கிறோம்” என்கிறார்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]