முதல் இந்திய சுதந்திருப் போர் or 1857 பெரும் கிளர்ச்சி

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

முதல் இந்திய சுதந்திருப் போர்  1857 

First Indian War 1857

 • முதல் இந்திய சுதந்திருப் போர் or 1857 பெரும் கிளர்ச்சி
 • புரட்சி பரவுதல் மற்றும் அடக்கப்படுதல்
 • புரட்சியின் தோல்விக்கான காரணங்கள்
 • 1857 ல் நடந்த புரட்சியில் ஜான்சியின் பங்கு
 • விக்டோரியா மகாராணி பேரறிக்கை 1858

முதல் இந்திய சுதந்திருப் போர் or 1857 பெரும் கிளர்ச்சி

 • இந்திய வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது.
 • இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் படைவீரர்கள் கிளர்ச்சி என்றும் இந்திய வரலாற்று அறிஞர்கள் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கின்றனர்
 • மக்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பும், பல காலமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த துயரங்களின் வெளிப்பாடுமே, 1857 ஆம் ஆண்டு புரட்சியாக வெடித்தது எனலாம்
 • 1857 ஆம் ஆண்டு படைவீரர்கள் கிளர்ச்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் கானிங் பிரபு.

புரட்சிக்கான காரணங்கள்

அரசியல் காரணங்கள்

 • ஆங்கிலேயர்களின் நாடு இணைப்புக் கொள்கை மிக முக்கியக் காரணங்களுள் ஒன்றாகும்.
 • வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத்திட்டம் இந்திய அரசர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
 • டல்ஹௌசி பிரபுவின் நாடு இழக்கும் கொள்கை இந்தியர்களிடையே ஒரு பயத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியது
 • இக்கொள்கையின் மூலம் சதாரா, நாக்பூர், ஜான்சி போன்ற அரசுகள் ஆங்கிலேயர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டன.
 • முகலாய வம்சத்தின் கடைசிப்பேரரசர் இரண்டாம் பகதூர் ஷாவிற்குப் பிறகு, அவரது வாரிசுகள் தங்களது பரம்பரை அரண்மனை மற்றும் செங்கோட்டையை ஆங்கில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர்.

நிர்வாகக் காரணங்கள்

 • நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழியைப் புகுத்தியதை மக்கள் விரும்பவில்லை
 • இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன. நல்ல கல்வி கற்ற இந்திய இளைஞர்கள் ஆங்கில வணிகக்குழு நிர்வாகத்தில் நல்ல வேலை கிடைக்குமென்று எதிர்பார்த்து எமாற்றம் அடைந்தனர்.

பொருளாதாரக் காரணங்கள்

 • பெண்டிங் பிரபு காலத்தில் கொண்டுவரப்பட்ட வங்காள நில குத்தகை சட்டத்தின்படி குத்தகை சுதந்திரம் கொண்ட நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதால் நிலச் சொந்தக்காரர்கள் பலர் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்.

சமூக மற்றும் சமயக் காரணங்கள்

 • சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது விதவைகள் மறுமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்களின் சமய பழக்க வழக்கங்களில் ஆங்கில அரசு தலையிடுவதாக இந்துக்கள் கருதினர்.
 • இந்துக்களின் சொத்துரிமைச் சட்டம் மாற்றப்பட்டு கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கும் தங்களின் முன்னோர்களின் சொத்துகளில் பங்குபெறும் உரிமை வழங்கப்பட்டது.

ராணுவக் காரணங்கள்

 • ராணுவத்தில் இந்தியப் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி சுபேதார் ஆகும்
 • இந்திய சிப்பாய்கள் தலைப்பாகை அணிதல், திலகமிடல், தாடிவளர்த்தல் ஆகியவற்றை செய்யத் தடை இருந்தது
 • 1856 ஆம் ஆண்டு கானிங்பிரபு பொதுப்பணிப் படைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இச்சட்டம் தேவை  ஏற்பட்டால் இந்தியச் சிப்பாய்கள் கடல் கடந்து சென்றும் போரில் ஈடுபடவேண்டும் என்று கூறியது
Click Here to Download