இறுதிச் சுற்றில் இந்திய இதயங்களை வென்ற தீபா கர்மகர்! - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

இறுதிச் சுற்றில் இந்திய இதயங்களை வென்ற தீபா கர்மகர்!

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மகர் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தருவார் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார் தீபா. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபா பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தது.

  • ஆனால் இறுதியில் தீபா கர்மகர் நான்காம் இடம் பிடித்தார். உலக ஜிம்னாஸ்டிக்ஸில் டாப் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்(தங்கம்) களத்தில் இருக்கும்போது நான்காம் இடம் பிடித்தது மிகப்பெரிய விஷயம். ஒட்டு மொத்த தேசமும் இவரது சாதனை பாரட்டியது.

 

  • இறுதி போட்டியில் அவர் ஆடிய விதம் அனைவரையும் ஆச்சர்யத்திலும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. போட்டி முடிந்து பேசிய தீபா கர்மகர் ”இது தான் எனது முதல் ஒலிம்பிக் போட்டி, இதல் நான்காம் இடம்பிடித்து பதக்கத்தை தவறவிட்டதில் எனக்கு வருத்தமில்லை. இதே குத்து சண்டையாக இருந்திருந்தால் நான் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு சமம். இன்னும் நான்கு ஆண்டுகளில் தங்கப்பதக்கத்தை கட்டாயம் வெல்வேன். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம் என கூறினார்.

  • ஒட்டுமொத்த இந்தியாவும் இவரது சாதனை பாராட்டியது. தீபா கர்மகர் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான முதல் படி என்று சமூக வலை தளங்கள் அவரை பாராட்டுகின்றன. தீபாவின் இந்த சாதனையையும், அவரது லட்சியத்துக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம். கமான் தீபா கர்மகர்.