மத்திய பட்ஜெட் 2016-2017

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Federal Budget 2016-2017

 

மத்திய பட்ஜெட் 2016-17 -ஐ மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:

 

 • பொருளாதார வளர்ச்சி உயர்ந்து 2015-16ல்6 சதவீதமாக இருந்தது. மந்தகதி அடைந்துவரும் உலக பொருளாதாரத்திற்கு இடையே இந்தியா பிரகாசமான இடம் என சர்வதேச பண நிதியம் பாராட்டி உள்ளது.

 

 • உலக அளவில் பாதகமான நிலைமைகள் இருந்த போதும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பருவ மழையில் 13 சதவீத குறைவு இருந்த நிலையிலும் வலுவான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

 

 • அந்நியச் செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத நிலையாக 350 பில்லிலியன் அமெரிக்க டாலராக உள்ளது.

 

 • 14-வது நிதிக் குழு பரிந்துரைப்படி 55 சதவீத வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னும் 2015-16-ஆம் ஆண்டு மறு மதிப்பீட்டு நிலையில் திட்டச் செலவினம் முந்தைய ஆண்டுகளில் இல்லாத மாதிரி உயர்வை அடைந்தது.

 

2016-17ன் சவால்கள்

 

 • உலக மந்த நிலையும் கொந்தளிப்பும் தொடரும் அபாயம்.

 

 • 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகள் மற்றும் ஒரு பதவி ஒரு ஊதியம் திட்ட அமலாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை.

 

 • முன்னேற்ற வரைபடம் மற்றும் முன்னுரிமைகள்

 

 • இந்தியாவை மாற்றி அமைப்போம் திட்டம் பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்க்கையிலும் முக்கியத் தாக்கத்தை விளைவிக்கும்.

 

 

 • அரசு கீழ்கண்டவற்றில் முக்கிய கவனம் செலுத்தும்

 

 • பெருமப் பொருளாதாரத்தின் நிலைத் தன்மையை உறுதி செய்தல் மற்றும் புத்திசாலிலித்தனமான நிதி நிர்வாகம்.

 

 • உள்நாட்டுத் தேவைகளை உயர்த்தி அமைத்தல்

 

 • பொருளாதாரச் சீர்திருத்த வேகத்தை தொடருதல் மற்றும் மக்கள் வாழ்க்கையை மேலும் சிறந்ததாக மாற்றி அமைக்க கொள்கைத் திட்டங்கள்

 

 • முன்னுரிமை பகுதிகளான விவசாயம் கிராமப் பகுதி, சமூகத் துறை, அடிப்படை வசதித் துறை, வேலைவாய்ப்பு உற்பத்தி, வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல் ஆகியவற்றிக்கு வழங்கும் நிதி அளவை உயர்த்துவதில் முக்கிய கவனம்.

 

 • பாதிப்புக்கு உள்ளாகும் துறைகளில் கீழ்கண்டவற்றின் மூலம் முக்கிய கவனம் செலுத்துதல்

 

 • பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

 

 • மருத்துவமனை செலவினங்களைக் கருத்தில் கொண்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

 

 • வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வசதிதற்போது நடைபெற்றுவரும் சீர்திருத்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்துதல், பொருட்கள் சேவைகள் வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல் மற்றும் நொடித்து போனவை, திவாலானவை சட்டம்.

 

 

 • முக்கியமான சீர்திருத்தங்களை கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளுதல்.

 

 • அரசு நலன்கள் உரிய பயனாளிகளுக்கு போய் சேருவதை உறுதி செய்வதற்கு ஆதார் தளத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்குதல்.

 

 • போக்குவரத்து துறையை இடையூறுகள் மற்றும் தடைகளிலிலிருந்து விடுவித்தல் எரிவாயு கண்டுபிடிப்பு மற்றும் துரப்பண பணிகளுக்கு சந்தை வசதி மூலம் ஊக்குவிப்பு வழங்குதல்.

 

 • நிதி நிறுவனங்கள் தீர்வுகளைச் சமாளிக்க விரிவான சட்டம் ஏற்றுதல்.

 

 • பொதுத்துறை தனியார் துறை பங்களிப்புத் திட்டங்கள், பொது உபயோக ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மறுமுறை பேசி உருவாக்கவும், அவை தொடர்பான தாவாக்களைத் தீர்த்து வைப்பதற்கும் சட்ட அமைப்பை ஏற்படுத்துதல்.

 

 • முக்கிய வங்கித் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை பொதுப்பட்டியலில் கொண்டுவருதல் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கிய மாற்றங் களை கொண்டுவருதல்.

 

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்

 

 • விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்களுக்கான ஒதுக்கீடு ரூ.35,984 கோடி.

 

 • பிரதமர் விவசாய பாசனத் திட்டம் மக்கள் இயக்க அடிப்படையில் செயல்படுத்தப்படும். 28.5 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு பாசன வசதி செய்து தரப்படும்.

 

 • விரைவுபடுத்தப்பட்ட பாசன வசதித் திட்டத்தின் கீழ் 89 பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் திட்டங்கள் விரைவு அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

 

 • நபார்டு வங்கியில் அர்ப்பணிக்கப்பட்ட நீண்ட கால பாசன நிதியம் உருவாக்கப்படும். இதற்கு தொடக்க நிதியாக ரூ.20,000 கோடி பயன்படுத்தப்படும்.

 

 • நிலைத்த நிலத்தடி நீர் நிர்வாக திட்டங்கள் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் பல்முனை நிதியளிப்பின் கீழ் செயல்படுத்தப்படும்.

 

 • மழையால் பாசன வசதி பெறும் பகுதிகளில் 5 லட்சம் பண்ணைக் குட்டைகளும் தோண்டு கிணறுகளும் ஏற்படுத்தப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் இயற்கை எரு தயாரிப்பதற்கென 10 லட்சம் உரக் குழிகள் உருவாக்கப்படும்.

 

 • 2017 மார்ச் மாதத்திற்குள் மண்வள அட்டைகள் திட்டம் 14 கோடகுடும்பங் களுக்கு விரிவாக்கப்படும்.

 

 • அடுத்த மூன்றாண்டுகளில் உர நிறுவனங்களின் 2000 மாதிரி சில்லறை நிலையங்களில் மண் மற்றும் விதைப் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும்.

 

 • பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின்படி இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும். வடகிழக்கு மண்டலத்தில் இயற்கை விவசாய மதிப்புச் சங்கிலி மேம்பாடு ஏற்படுத்தப்படும்.

 

 • மொத்தச் சந்தைகளுக்கென பொது மின்னணு சந்தை மேடை அமைக்க ஒருமித்த வேளாண் சந்தைப்படுத்துதல் மின்னணு மேடை அமைக்கப்படும்.

 

 • பிரதமர் ஊரகச் சாலை திட்டத்தின்படி ஒதுக்கீடு ரூ.19,000 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டிற்குள் எஞ்சி யுள்ள தகுதியுள்ள 65,000 குடியிருப்புகள் இதனால் சாலைகளால் இணைக்கப்படும்.

 

 • விவசாயிகள் கடன்களை திரும்பச் செலுத்தும் பளுவைக் குறைக்க 2016-17-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.15,000 கோடி வட்டித் தள்ளுபடிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 • பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு ரூ.5,500 கோடியாகும்.

 

 • பால் வளத் திட்டங்களான பசுதான் சஞ்ஜீவனி, நகுல் ஸ்வத்தியா பத்திர, மின்னணு பசுதான் விற்பனை அங்காடி மற்றும் உள்நாட்டு பசு வகைகளுக்கான தேசிய மரபு மையம் ஆகியவற்றுக்கு ரூ.850 கோடி ஒதுக்கீடு.

 

ஊரகத் துறை

 

 • ஊரகத் துறைக்கு ரூ.87,765 கோடி ஒதுக்கீடு

 

 • 14-வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் நகராட்சி களுக்கும் மானிய உதவியாக ரூ.2.87 லட்சம் கோடி வழங்கப்படும்.

 

 • வறட்சி மற்றும் கிராமியத் துயரங்கள் பாதித்த ஒவ்வொரு ஒன்றியமும் தீன்தயாள் வறியோர் இயக்கத்தின் கீழ் தீவிர செயல்பாட்டு ஒன்றியமாக கொண்டு வரப்படும்.

 

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு.

 

 • ஷியாம பிரசாத் முகர்ஜி ஊரக நகர்புற இயக்கத்தின்படி 300 ஊரக நகர்புற தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.

 

 • 2018 மே முதல் தேதி அன்று 100 சதவீத கிராமங்களுக்கும் மின் வசதி செய்துதரப் படும்.

 

 • மத்திய அரசு திட்டங்கள், மத்திய அரசு உதவி பெறும் திட்டங்கள் ஆகியவற்றின் நடைமுறை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள மாவட்டத்தின் அதிக வயது மக்களவை உறுப்பினர் தலைமையில் மாவட்ட நிலைக் குழுக்கள் அமைத்தல்.

 

 • திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலும் அகற்றிய கிராமங்களுக்கு பரிசளிக்கும் வகையில் அவற்றுக்கான மத்திய அரசு ஆதரவு பெறும் திட்டங்களில் முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குதல்.

 

 • அடுத்த மூன்று மாதங்களில் 6 கோடி கூடுதல் வீடுகளை இணைக்கும் வகையில் நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்கு புதிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கத் திட்டம்.

 

 • தேசிய நில ஆவண நவீனமயமாக்கல் திட்டம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

 

 • ரூ.655 கோடி ஒதுக்கீட்டில் தேசிய கிராம சுய ஆட்சி இயக்கத் திட்டம் என்ற புதிய திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

 • சுகாதார பேணல் உள்ளிட்ட சமூகத் துறை கல்வி, சுகாதாரப் பேணல் உள்ளிட்ட சமூகத் துறைகளுக்கு ஒதுக்கீடு ரூ.1,51,581 கோடி.

 

 • வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க தொடக்கச் செலவினமாக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.

 

 • புதிய ஆரோக்கிய பேணல் திட்டம் குடும்பம் ஒன்றிக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கும். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை ரூ.30,000 மேலும் கூடுதலான காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

 • பிரதமர் மக்கள் மருத்துவ திட்டத்தின்படி 2016-17-இல் 3,000 மருந்துக் கடைகள் திறக்கப்படும்.

 

 • தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பொதுத் துறை தனியார் துறை பங்களிப்பு மாதிரியில் தேசிய டயாலிலிசிஸ் சேவைத் திட்டம் தொடங்கப்படும்.

 

 • நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் மூலம் வங்கிக் கிளை ஒவ்வொன்றுக்கும் குறைந்தது 2 திட்டங்களுக்கு நிதி வசதி வழங்கப்படும். இதனால் குறைந்தது5 லட்சம் தொழில் முனைவோர் பயன் பெறுவார்கள்.

 

 • தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மையம் தொழில் துறை உதவியுடன் உருவாக்கப்படும்.

 

 • பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா மற்றும் குரு கோவிந்த் சிங் 350-வது பிறந்த ஆண்டு விழா ஆகிய வற்றைக் கொண்டாட ரூ.100 கோடி வீதம் ஒதுக்கீடு.

 

கல்வி

 

 • புதிதாக 62 நவோதையா வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும்.

 

 • அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்க்ஷா அபியான்) திட்டம் கல்வி தரம் குறித்து மிகக் கூடுதலான கவனம் செலுத்தும்.

 

 • உலகத் தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக வளர 10 பொதுத் துறை மற்றும் 10 தனியார் துறை நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை வழங்குதல்.

 

 • உயர் கல்வி நிதி முகமை ரூ.1,000 கோடி தொடக்க மூலதனத்துடன் அமைக்கப்படும்.

 

 • பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்லூரி பட்டச் சான்றிதழ், கல்வி விருது சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றிக்கான டிஜிட்டல் அடிப்படை இருப்பு மையம் உருவாக்கப்படும்.

 

திறன் மேம்பாடு

 

 • திறன் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு ரூ.1,804 கோடி.

 

 • பல் திறன் பயிற்சி நிறுவனங்கள் 1500 அமைக்கப்படும்.

 

 • தொழிற்துறை மற்றும் கல்வி நிறுவனங் கள் பங்களிப்புடன் தேசிய திறன் மேம்பாட்டுச் சான்றளிக்கும் வாரியம் ஏற்படுத்தப்படும்.

 

 • பெரிய அளவிலான ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொழில்முனைவுத் திறன் கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படும்.

 

வேலைவாய்ப்பு உருவாக்கம்

 

 • புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு முதல் மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசு அவர்களது ஊழியர் வருங்கால வைப்பு நிதியில்33 சதவீதம் பங்களிக்கும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1,000 கோடி.

 

 • வருமான வரிச் சட்டத்தின்படி கட்டாய தணிக்கை மேற்கொள்ள வேண்டிய அனைத்து வரி செலுத்துவோருக்கும் வருமான வரிச் சட்டம் 80ஓஓஆஆ பிரிவின் படியான வருமான வரிக்குரிய தொகைக் குறைப்பு வசதி கிடைக்கும்.

 

 • தேசிய பணிச் சேவைகள் திட்டத்தின்படி 2016-17ம் ஆண்டு இறுதிக்குள் 100 மாதிரி தொழில் மையங்கள் செயல்படத் தொடங்கும்.

 

 • மாதிரிக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுக்கு அனுப்பப்படும்.

 

அடிப்படை வசதி மற்றும் முதலீடுகள்

 

 • பிரதமர் ஊரக சாலைகள் திட்ட ஒதுக்கீடு உட்பட சாலைத் துறையின் மொத்த முதலீடு 2016-17ன் போது ரூ.97,000 கோடியாக இருக்கும்.

 

 • 2015-ஆம் ஆண்டில் புதிய நெடுஞ்சாலை களுக்கான இந்தியாவின் அதிகபட்ச கி.மீட்டருக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இது 2016-17-இல் 10,000 கி.மீ-க்கான தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்ட அனுமதியாகும்.

 

 • சாலைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு                 ரூ.55,000 கோடி. கூடுதலான ரூ.15,000 கோடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பத்திரங்கள் மூலம் திரட்டும்.

 

 • அடிப்படை வசதித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2,21,246 கோடி.

 

 • சாலைப் போக்குவரத்து துறையை பயணியர் பிரிவுக்கு திறந்துவிட மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

 

 • சாலை இணைப்பு இல்லாத அல்லது மிகக் குறைவாக இருக்கும் விமான நிலையங் களுக்கென செயல்திட்ட புதுப்பிப்பு மாநில அரசுகள் பங்களிப்புடன் ஏற்படுத்தப் படும்.

 

 • ஆழமான மற்றும் மிக ஆழமான கடல் பகுதி, உயர் அழுத்தம், உயர் வெப்ப நிலை பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்க சந்தைப்படுத்துவதில் சுதந்திரம் வழங்குதல்.

 

 • அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் அணுசக்தி திட்டங்களில் முதலீட்டை அதிகரிப்பதற்கான விரிவான திட்டம் வரையப்படும்.

 

 • பொதுத் துறை தனியார் துறை பங்களிப்புக்குப் புத்துயிர்வூட்ட கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

 • பொதுப் பயன்பாடு தாவாக்கள் தீர்வு மசோதா 2016-17 ஆண்டின் போது தாக்கல் செய்யப்படும்.

 

 • பொதுத் துறை தனியார் துறை பங்கேற்பு சலுகை ஒப்பந்தங்கள் வரைவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்படும்.

 

 • அடிப்படை வசதி திட்டங்களுக்கான புதிய கடன் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.

 

 • அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய வழியில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் துறையில் அனுமதிப்பது.

 

 • பொதுத் துறை நிறுவனங்களில் அரசு முதலீட்டை நிர்வகிப்பதற்கான புதியக் கொள்கை. பங்குகளை விலக்கிக் கொள்ளுதல், அனுகூலமான விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கிய இக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

நிதித்துறை சீர்திருத்தங்கள்

 

 • நிதிநிறுவனங்களின் தீர்மானங்கள் குறித்து விரிவான கோட்பாடு முறைமை அறிமுகப்படுத்தப்படும்

 

 • 2016-ம் ஆண்டு நிதி மசோதாவின் வாயிலாக நாணயக் கொள்கை வரையறை மற்றும் நாணயக் கொள்கை குழுவுக்கு சட்டப்பூர்வமான அடிப்படை

 

 • நிதி தரவு மேலாண்மை மையம் ஒன்று அமைக்கப்படும்.

 

 • அரசின் கடன் பத்திரங்களில் சில்லறை விற்பனையில் ரிசர்வ் வங்கியின் பங்களிப்பு

 

 • பண்டகத் துணை பொருட்களுக்கான சந்​தைக்குத் தேவையான கூடுதலான பட்டியலை செபி தயாரிக்கும்.

 

 • 2002-ம் ஆண்டு சர்ஃபேஸி (நஆதஎஆஊநஒ ஆஈப 2002) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்

 

 • சட்டத்திற்குப் புறம்பான சேமிப்பு திட்ட பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மத்திய சட்டம்.

 

 • பங்குச்சந்தை மேல் முறையீட்டு நடுவர் மன்றங்களுக்கு கூடுதலான உறுப்பினர்கள் மற்றும் கிளைகள்.

 

 • பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதன முதலீட்டிற்காக கூடுதலாக ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

 

 • பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத் தின் கீழ் அனுமதிக்கப்பட்ட இலக்குத் தொகை ரூ. 1,80,000 கோடி.

 

 • அரசுக்குச் சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிலிடப்படும்.

 

ஆளுமையும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குதலும்

 

 • பல்​வேறு அமைச்சகங்களில் மனித ஆற்றலை சீரமைப்பதற்காக அலுவல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

 • சுய அதிகார அமைப்புகளை சீரமைக்கவும், விரிவாக மறு ஆய்வு செய்யப்படும்.

 

 • ஆதார் கட்டமைப்பை பயன்படுத்தி நிதி மற்றும் மற்ற மானியங்கள் இலக்கு அடிப் படையில் பயனீட்டாளர்களை சென்றடைவதற்கு மசோதா ஒன்று அறிமுகப் படுத்தப்படும்.

 

 • உரத்திற்கு சோதனை அடிப்படையில் நேரடி பட்டுவாடா முறை அறிமுகப்படுத்தப் படும்.

 

 • 2017-ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் 3 லட்சம் நியாயவிலைக் கடைகளில் தானியங்கி வசதி ஏற்படுத்தப்படும்.

 

 • புதிதாக தொழில் முயற்சி துவங்குவதற்கு சாதகமான சூழலை மேம்படுத்தும் வகையில் நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்,

 

 • பருப்பு விலைகளை ஒரே நிலையில் இருக்கும் வகையில் பராமரிப்பதற்காக ரூ. 900 கோடி முதலீட்டில் விலை நிலை பராமரிப்பு நிதியம்.

 

 • மாநிலங்களையும். மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஒன்று பட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் (ஏக் பாரத், ​ஸ்ரேஸ்தா பாரத்) என்ற இயக்கம் தொடங்கப்படும். மொழி, வர்த்தகம். கலாச்சாரம், பயணம், சுற்றுலா போன்ற துறைகளின் வாயிலாக மக்களிடையே பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் இது ஆண்டு திட்டமாக அமையும்.

 

நிதி ஒழுங்குமுறை

 

 • நிதி பற்றாக்குறை 2015-16-ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில்9 சதவீத மாகவும், 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 3.5 சதவீதமாக இருக்கும்.

 

 • 2015-16-ம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை இலக்கு8 சதவீதத்திலிலிருந்து 2.5 சதவீதம் ஆகும்.

 

 • மொத்த செலவினம் ரூ78 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 • திட்டமிட்டச் செலவு ரூ. 5.50 லட்சம் கோடியாக இருக்கும். இது3 சதவீதம் கூடுதலாகும்.

 

 • திட்டமிடப்படாத செலவு ​ரூ. 14.28 லட்சம் கோடியாக பராமரிக்கப்படும்.

 

 • வேளாண்மை, பாசனம், உடல்நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஷெட்யூல்ட் வகுப்பினர் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன் ஆகிய சமூகத்துறைப் பணிகள், கட்டமைப்பு ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம்.

 

 • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொது நிதிக்கழகம், ஊரக மின்கழகம், நபார்ட் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் ஆகியவை பத்திரங்களின் வாயிலாக ரூ.31,300 கோடி அளவுக்கு கூடுதல் நிதி திரட்டும்.

 

 • 2017-18-ஆம் ஆண்டு முதல் திட்டமிடுதல், திட்டமிடப்படாதவை என்ற பகுப்பு தவிர்க்கப்படும்.

 

 • அனுமதி வழங்கப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் கால அளவு வரையப்படும் பயன்கள் பற்றிய மதிப்பீடும் இருக்கும்.

 

 • 1,500-க்கு மேற்பட்ட மத்திய திட்டங்கள் சீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும். இவை 300 மத்தியத் துறைகளாகவும், 30 மத்திய அரசு ஆதாரவிலான திட்டங் களாகவும் மாற்றப்படும்.

 

 • நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை ஆய்வு செய்ய குழு சிறிய அளவில் வரி செலுத்துவோர்களுக்குச் சலுகை

 

 •  ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களின் வரிச்சுமைû​ய குறைக்கும் வகையில் 87-ஏ விதியின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகை வரம்பு ரூ. 2 ஆயிரத்திலிலிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது,

 

 • வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு உதவும் வகையில் 80 ஜி ஜி விதியின் கீழ் செலுத்தும் வாடகைக் குறைப்பு வரம்பு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 24 ஆயிரத்திலிலிருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

வேலைவாய்ப்பை பெருக்குதலும், வளர்ச்சியும்

 

 

 • நடுத்தர, சிறிய, நுண்ணிய தொழில் துறையில் கூடுதலான பேருக்கு உதவி யளிக்கும் வகையில் வருமானவரி சட்டத்தின் 44- ஏடி பிரிவின் கீழான உத்தேச வரி விதிப்பு திட்டத்தின் கீழ் மொத்த வர்த்தக வரம்பு ரூ 2 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

 

 • ரூ. 50 லட்சம் மொத்த வருவாயுடைய தொழில் ரீதியானவர்களின் லாபம் 50 சதவீதமாக இருப்பதாக கருதுபவர்களுக்கு, உத்தேச வரி விதிப்பு திட்டம் விரிவுப் படுத்தப்படும்.

 

 • வருமானவரி சட்டத்தின் கீழ் கழிவுகளை படிப்படியாகக் குறைத்தல்

 

 • வருமானவரிச் சட்டத்தில் எங்கெல்லாம் விரைவுபடுத்தப்பட்ட தேய்மானம் அனுமதிக்கப்படுகிறதோ, அதன் உயர்வு வரம்பு4.2017- முதல் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.

 

 • ஆராய்ச்சிப் பணிகளுக்காக கழிவுப்பயன்04.2017- முதல் 150 சதவீதமாகவும் 01.04.2020-முதல் 100 சதவீதமாகவும் வரையறுக்கப்படும்.

 

 • சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள புதிய அலகுகளுக்கு வழங்கப்படும் 10 ஏஏ பிரிவின் பயன்03,2020-க்கு முன் செயல்படத் தொடங்கும் எல்லா தொழில் பிரிவுகளுக்கும் கிடைக்கும்.

 

 • திறன் மேம்பாட்டுக்கான 35 சிசிடி-யின் கீழ் கூடுதலான கழிவு04.2020 வரை தொடரும்.

 

நிறுவன வரி வீத யோசனைகள்

 

 • 01.03.2016-ஆம் தேதியிலோ அல்லது அதற்குப் பிறகோ தொடங்கப்படும் புதிய உற்பத்தி நிறுவனங்கள் லாபத்துடன் இணைக்கப்பட்ட அல்லது முதலீட்டுடன் இணைக்கப்பட்ட கழிவுகளை கோரா விட்டால், அவர்கள் 25 சதவீதம் + கூடுதல் கட்டணம் மற்றும் தீர்வை வரிவிதிப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் அவர்கள் முதலீட்டுப் படியையும் விரைவுபடுத்தப்பட்ட தேய்மானத்தையும் பெற இயலாது.

 

 • சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு குறைவான நிறுவன வரி விதிப்பிற்கு, அதாவது 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் நிதியாண்டில் மொத்த வர்த்தகத் தொகை ரூ. 5 கோடிக்கும் மிகாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு 29 சதவீதம் + சர்சார்ஜ் மற்றும் தீர்வை இருக்கும்.

 

 • 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு மார்ச் முடிய உள்ள காலத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் முயற்சி யாளர்களுக்கு ஐந்தாண்டுகளில் 3 ஆண்டு களுக்கு 100 சதவீத லாப கழிவு. இத்தொழில் துறைகளுக்கு குறைந்தபட்ச மாற்ற வரிவிதிப்பு இருக்கும்.

 

 • இந்தியாவில் வாழ்பவர்கள் உருவாக்கி இந்தியாவில் பதிவு செய்யும் வடிவமைப் புகளை உலகளவு பயன்பாட்டின்மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 10 சதவீத வரி.

 

 • பிணை முறி அறக்கட்டளைகளுக்கு வருமானவரி விதிப்பிலிலிருந்து மாற்றம்.

 

 • பிணை முறி அறக்கட்டளைகள் ஆதார நிலையிலேயே வரியைக் கழிக்க வேண்டும்.

 

 • பட்டியலிலிடப்படாத கம்பெனிகள் நீண்ட கால மூலதன லாப பயனைப் பெறுவதற்கான கால அளவை மூன்றிலிலிருந்து இரண்டாண்டுகளாகக் குறைக்க உத்தேசம்.

 

 • வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் திரும்பி வராத அல்லது சந்தேகத்திற்குரிய கடன்களை பொறுத்த வரையில் அவர்கள் வருவாயில் ஐந்து சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்.

 

 • வெளிநாட்டு நிறுவனங்களின் இருப்பிடங்கள் பற்றிய நிலையை செயல் பாட்டு மேலாண்மை அடிப்படையில் தீர்மானிப்பது ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

 

 • பொதுவான தவிர்ப்புக்கு எதிரான விதி கார் விதியை 1-4-2017 முதல் நடைமுறைப் படுத்த உறுதி

 

 • தீன்தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முயற்சி அமைச்சகத்தின் மதிப்பீட்டுக் குழுவில் இடம் பெறும்

 

 

 • ஆட்டிசம், மூளை முடக்கம், மூளை வளர்ச்சிக் குன்றுதல், பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள் ஆகியோரின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள தேசிய அறக்கட்டளை தொடங்கியுள்ள நிராமயா உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொதுவான காப்பீட்டு சேவைகளுக்கு சேவை வரியிலிலிருந்து விலக்கு.

 

 • குளிர்சாதன பெட்டகங்களுக்கான சுங்க மற்றும் எக்சைஸ் தீர்வை 5 மற்றும் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

 • தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள், மூலதன பொருட்கள், பாதுகாப்பு உற்பத்தி பொருட்கள், துணி ஆலைகள், கனிம எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய், ராசயனம், பெட்ரோ ராசாயனம், காகிதம், காகித அட்டை, செய்தித்தாள், விமானங் களை பழுது பார்த்தல், பராமரித்தல், கப்பல்களை பழுது பார்த்தல் ஆகிய துறைகளில் செலவுகளை குறைப்பதற்கும், உள்நாட்டு தொழில் துறைகளுக்கு இடையே போட்டியை மேம்படுத்தவும் இவற்றிற்கான சில இடுபொருட்கள் மீதான சுங்க மற்றும் எக்சைஸ் தீர்வையில் மாற்றங்கள்.

 

 • தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழுள்ள ஒருவர் ஓய்வு பெறுகையில் மொத்தம் நிலுவையில் உள்ள தொகையில் 40 சதவீதத்தை எடுக்கும்போது 100 சதவீத வரிவிலக்கு பெறுவார்கள். பின்னர் அவரது சட்டபூர்வமான வாரிசுக்கு வழங்கப்படும் அவரது முதலீட்டுத்தொகையும் வரிவிதிப் பிற்கு உட்படாது.

 

 • ஓய்வூதிய நிதிகள், ஊழியர் பொதுவைப்பு நிதி உள்ளிட்டு அங்கீகரிக்கப்பட்ட பொதுவைப்பு நிதிகளைப் பொறுத்த வரையில்4.2016 தேதியிலிலிருந்து பெறப் பட்ட பங்களிப்புகளிலிலிருந்து உருவான மூலதனத்திற்கும் இதே 40 சதவீத வரிவிலக்கு பொருந்தும்.

 

 • அங்கீகரிக்கப்பட்ட பொதுவைப்பு மற்றும் ஓய்வு நிதிகளில் முதலாளிகளின் சார்பில் செலுத்தப்படும் பங்களிப்பிற்கு வரிச்சலுகையானது ரூ. 1.5 லட்சம் என்ற அளவிற்கு மட்டுப்படுத்தப்படுகிறது. தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர் பொதுவைப்பு நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும் சேவைக்கு சேவை வரியிலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 

 • ஒரே பிரிமியம் அடிப்படையிலான ஓய்வுதிய (காப்பீடு) திட்டத்தின் கீழான பாலிசிகளுக்கான சேவை வரியானது ஒரு சிலவற்றிற்கு மட்டும் தற்போதுள்ள5 சதவீதத்திலிலிருந்து 1.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

 

 • இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் 30 சதுர மீட்டர் அளவிலும் இதர நகரங்களில் 60 சதுர மீட்டர் அளவிலும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கும் வீட்டுவசதி திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களின் லாபத்திற்கு 100 சதவீத வரிவிலக்கு. ஜூன் 2016 முதல் மார்ச் 2019 வரையில் அனுமதி பெற்று மூன்றாண்டு களுக்குள் நிறைவேற்றப்பட்ட திட்டங் களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். எனினும் குறைந்தபட்ச மாற்று வரிக்கு இது உட்படும்.

 

 •  முதல் முதலாக வீடு வாங்குவோருக்கு 2016-17-ஆம் நிதியாண்டில் அனுமதிக்கப் பட்ட கடன்களில் வீட்டின் விலை ரூ. 50 லட்சத்திற்கு மிகாமலும் கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 35 லட்சம் வரையான கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு கூடுதலாக ரூ. 50,000 ஆண்டொன்றுக்கு வரி விலக்கு.

 

 • வீட்டு வசதி முதலீட்டு டிரஸ்ட் மற்றும் கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட் ஆகிய வற்றில் செலுத்தப்படும் சிறப்பு நோக்கம் கொண்ட, குறிப்பிட்ட வகையிலான பங்கு அடிப்படையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் செய்யும் முதலீட்டிற்கு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வழங்கப்படும் டிவிடெண்ட்கள் தற்போதுள்ள டிவிடெண்ட் பங்கீட்டு வரிக்கு உட்படுத்தப் படாது.

 

 • பொதுத்துறை, தனியார் துறை கூட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அல்லது மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்தின் கீழும் 60 சதுர மீட்டர் வரையில் வாங்கக்கூடிய வகையிலான வீடுகளை கட்டுவதற்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் சேவை வரியிலிலிருந்து விலக்கு.

 

 • கட்டுமானப் பணிகளில் வேலையிடத்தில் தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவைக்கு எக்சைஸ் வரியிலிலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகை தற்போது தயார் நிலையில் உள்ள கான்கிரீட் கலவைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

விவசாயம், கிராமப்புறப் பொருளாதாரம், தூய்மையான சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்காக நிதியாதார வளங்களை திரட்டுவது

 

 • ஆண்டிற்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் டிவிடெண்ட் பெறுபவர்கள் மீது மொத்த டிவிடெண்ட் தொகையில் 10 சதவீதம் கூடுதல் வரி.

 

 • தொழில் நிறுவனங்கள், நிறுவன அமைப்புகள், கூட்டுறவு கழகங்கள் ஆகியவை தவிர்த்த மற்றவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேலாக இருப்பின் அவர்களுக்கான கூடுதல் வரி தற்போதுள்ள 12 சதவீதத்திலிலிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.

 

 • ரூ. 10 லட்சத்திற்கு அதிகமான மதிப்புடைய சொகுசு ஊர்திகள் மற்றும் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பணமாக செலுத்துவது ஆகியவற்றின் போதுஅதற்கான ரசீது உருவாக்கப்படும் துவக்க நிலையிலேயே 1 சதவீதம் வரியாகப் பிடித்தம் செய்யப்படும்.

 

 • தேர்ந்தெடுக்கும் வகையிலான பங்கு பரிவர்த்தனைக்கான வரி தற்போதுள்ள17 சதவீதத்திலிலிருந்து 0.5 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

 

 • ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் குடியிராதவர்களுக்கு அனுப்பப்படும் தொகையானது ஆண்டிற்கு ரூ. 1 லட்சத்திற்கு அதிகமாக இருப்பின் ஒட்டுமொத்த தொகையில் 6 சதவீதம் சமப்படுத்துவதற்கான வரியாக வசூலிலிக்கப்படும்.

 

 • ஜூன் 1, 2016 முதல் வரி செலுத்தப்படும் அனைத்து சேவைகளின் மீது கூடுதலாக5 சதவீதம் கிரிஷி கல்யாண் கூடுதல் வரியாக வசூலிக்கப்படும். இவ்வாறு கூடுதல் வரியாக சேகரிக்கப்படும் தொகை முழுவதும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நிதி வழங்கும் முன்முயற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த கூடுதல் வரியை செலுத்துவோர் இத்தொகையை இடுபொருள் வரி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

 

 • கட்டமைப்பிற்கான கூடுதல் வரியானது சிறிய பெட்ரோல், எரிவாயு, அழுத்தம் தரப் பட்ட வாயு ஆகிய வகைப்பட்ட ஊர்தி களுக்கு 1 சதவீதமும், டீசல் வகைப்பட்ட ஒரு குறிப்பிட்ட திறனுடைய ஊர்திகளுக்கு5 சதவீதமும், இதர உயர் இஞ்சின் திறன் கொண்ட ஊர்திகளுக்கு 4 சதவீதமும் விதிக்கப்படும். இந்தக் கூடுதல் வரிக்கும் எவ்வித பற்றுவரவும் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த கூடுதல் வரி செலுத்துவதற் காக வேறு எந்த வரி வரவு ஏற்பாட்டையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை.

 

 • (வைரம் மற்றும் இதர விலைமதிப்பான கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் இல்லாத மற்ற நகைகள், வெள்ளி நகைகள் ஆகியவை தவிர) மற்ற நகைப் பொருட்களின் மீது வரிவரவு வசதியில்லாமல் 1 சதவீதமும் வரிவரவு வசதியுடன்5 சதவீதமும் எக்சைஸ் வரி விதிப்பு. இதில் மேற்கூறிய விதிவிலக்கிற்கு ரூ 6 கோடி உச்சவரம்பாகவும், வரி வரவு அளவிற்கு உட்பட்ட வகைக்கு ரூ. 12 கோடி உச்சவரம்பாகவும் அமையும்.

 

 • விற்பனை விலை ரூ. 1000 அல்லது அதற்கு மேல் விலையுள்ள ஆயத்த ஆடை களுக்கு வரி வரவு அடிப்படையிலான எக்சைஸ் வரி 2 சதவீதம் விதிக்கப்படுகிறது. இது வரிவரவு அடிப்படையில் இல்லாத வற்றிற்கு5 சதவீதமாக இந்த வரி இருக்கும்.

 

 • நிலக்கரி, லிக்லினைட் மற்றும் பீட் ஆகிய பொருட்களின்மீது விதிக்கப்பட்டு வரும் தூய்மையான எரிசக்தி கூடுதல் வரி என்பது தூய்மையான சுற்றுச்சூழலுக்கான கூடுதல் வரி என மாற்றப்படுவதோடு, இந்த வரி விகிதமும் டன்னுக்கு ரூ. 200 லிலிருந்து ரூ. 400 ஆக உயர்த்தப்படுகிறது.

 

 • பீடியைத் தவிர இதர பல்வேறு புகையிலை பொருட்களுக்கான எக்சைஸ் வரியானது 10 சதவீதத்திலிலிருந்து 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

 

 • அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான உரிமையை வழங்குவது; அதை பரிமாறிக் கொள்வது ஆகியவை சேவைவரி விதிக்கத் தக்க வரியாக இனி கருதப்படும். கண்ணுக்குப் புலப்படாத பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் தொகை மீது விதிக்கப்படும் வரியாக இது இனி கருதப்பட மாட்டாது.

 

 • வரிவிதிப்பில் உறுதித் தன்மையை வழங்குவது

 

 • கருப்புப் பணத்தைக் குறைக்கவும் நிலைத்த, ஊகிக்கத்தக்க வரிவிதிப்பு முறையை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

 

 • உள்நாட்டில் வரிசெலுத்துவோர் கணக்கில் வராத வருமானம் அல்லது ஏதாவது சொத்து என்ற வகையில் பெறப் படும் வருமானமாக இருப்பதை அறிவித்து அதன் மீது 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி மற்றும் அபராதமாக5 சதவீதம் என மொத்தம் 45 சதவீதத்தை இந்தக் கணக்கில் வராத வருமானத்திற்கு வரியாக செலுத்தலாம். இவ்வாறு அறிவிப் போருக்கு கைது போன்ற தண்டனை நடவடிக்கைகளிலிலிருந்து விலக்கு உண்டு.

 

 • மேற்கூறிய வகையில் கூடுதல் வரியாக விதிக்கப்படும்5 சதவீத வரியிலிலிருந்து பெறப்படும் வருமானம் க்ரிஷி கல்யாண் கூடுதல் வரி என அழைக்கப்படுவதோடு இந்தத் தொகையானது விவசாயத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் பயன் படுத்தப்படும்.

 

 • புதிய சச்சரவு தீர்வு திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்த சச்சரவு தொகை ரூ. 10 லட்சம் வரையில் எவ்வித தண்டனைத் தீர்வும் கிடையாது. சச்சரவுத் தொகை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பின் விதிக்கத்தக்க தண்டனைத் தீர்வில் 25 சதவீதம் அந்தத் தொகைக்கு விதிக்கப்படும். இத்தகைய தண்டனைத் தீர்வை எதிர்த்து செய்யப்பட்டுள்ள எந்த மேல்முறையீட்டையும் விதிக்கத்தக்க தண்டனை தீர்வில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தையும், கூடுதல் தொகை மீதான வரிக்கான வட்டித் தொகை ஆகியவற்றை செலுத்துவதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

 

 • வரி மதிப்பீட்டு அலுவலரால் பின் தேதியிட்டு திருத்தப்பட்ட விதிகளின் கீழ் எழுப்பப்பட்டும் வரி தொடர்பான புதிய வழக்குகளை வருவாய் செயலர் தலைமை யிலான மேல்மட்டக் குழு மேற்பார்வையிடும்.

 

 • பின் தேதியிட்டு திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையிலான புதிய வழக்குகள் குறித்த சச்சரவுகளை தீர்த்துக்கொள்ள ஒரே தடவை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

 • வருமானத்தை குறைத்துக் காட்டிய வழக்குகளுக்கு தண்டனை தீர்வு விகிதம் 50 சதவீதமாகவும் உண்மையை திரித்துக் கூறிய வகையில் எழுப்பப்பட்ட வழக்குகளுக்கு 200 சதவீத தண்டனைத் தீர்வுமாகவும் இருக்கும்.

 

 • அனுமதிக்கப்படாத அளவு என்பது விலக்கு தரப்பட்ட வருமானம் தரும் முதலீடுகளின் சராசரி மாதாந்திர மதிப்பின் 1 சதவீதமாக இருக்கும். எனினும் வருமான வரிச் சட்டத்தின் 14ஏ பிரிவின் விதி 8டி யின் கீழ் கோரப்படும் உண்மையான செலவை விட அதிகமாக இது இருக்கலாகாது.

 

 • விதிக்கப்பட்ட வட்டி மற்றும் தண்டனைத் தீர்வு ஆகியவற்றை ரத்துசெய்யக் கோரும் வரி செலுத்துவோரின் மனுக்களை தீர்ப்பதற்கான கால வரம்பு ஒரு ஆண்டாக இருக்கும்.

 

 • இதற்குரிய மேல் முறையீடு வருமான வரி ஆணையர் (மேல்முறையீடு) முன்னால் நிலுவையில் இருந்த போதிலும், சச்சரவிற்குரிய கோரிக்கை தொகையில் 15 சதவீத தொகையை வரி செலுத்துபவர் செலுத்தியதுமே இந்தக் கோரிக்கையை தற்காலிலிகமாக நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை மதிப்பீடு செய்யும் அலுவலர் வழங்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

 

 • வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்வாயத்தின் ஓர் உறுப்பினர் அமர்வில் தீர்வு காண மேல்முறையீடு செய்வதற்கான மதிப்பின் அளவு ரூ 15 லட்சத்திலிலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

 

 • சுங்கவரி, எக்சைஸ் வரி, சேவை வரி ஆகியவற்றிற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கென 11 புதிய அமர்வுகள் உருவாக்கப்படும்.

 

வரிகளை எளிமைப்படுத்தலும் ஒழுங்கு  படுத்தலும்

 

 • ஆண்டிற்கு ரூ. 50 கோடிக்கும் குறைவாக வருவாய் ஈட்டுகின்ற, பல்வேறு அமைச்சகங்களாலும் விதிக்கப்பட்டு வரும், 13 தீர்வைகள் ரத்து செய்யப்படும்.

 

 • நிரந்தர அடையாள அட்டைக்கு மாற்றாக இதர ஆவணங்களை வழங்கும் இந்தியாவில் வசிக்காத இந்திய குடியுரிமை பெற்றோருக்கு அதிக அளவில் தற்போது பிடிக்கப்பட்டு வரும் துவக்க நிலை பிடிப்பு இனி பொருந்தாது என அறிவிப்பு.

 

 • மதிப்பீட்டிற்கான படிவத்தை திருத்தம் செய்வது மத்திய எக்சைஸ் மதிப்பீடுகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

 

 • வரி விதிக்கப்பட முடியாத சேவைகளைப் பொறுத்தவரையில் செலுத்திய வரிக்கான வரவை மாற்றிக் கொள்வதற்கு வங்கிச் சேவையல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்டு, வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி.

 

 • நீண்ட நாட்களாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு காலம் நீட்டிக்கப்பட்ட வகையில் சுங்கத் தீர்வை செலுத்த அனுமதி அளிக்கும் வகையில் சுங்க சட்டம் வழிவகுக்க உள்ளது.

 

 • அடுத்த நிதியாண்டின் துவக்கத்திலிருந்து முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் சுங்கத்துறையின் ஒற்றைச் சாளரத் திட்டம் அமல்படுத்தப்படும்.

 

 • பன்னாட்டு பயணிகளுக்கான இலவச சுமைக்கான சலுகை அளவை அதிகரிப்பது. தீர்வை விதிக்கத்தக்க பொருட்களுக்கு மட்டுமே சுமையை பதிவு செய்வது.

 

 • வரவிருக்கும் ஆண்டுகளில் 7 பெரு நகரங்களில் உள்ள அனைத்து வரி செலுத்து வோருக்கும் இணையம் வழியான மதிப்பீட்டிற்கான வாய்ப்பை விரிவு படுத்துவது.

 

 • மேல்முறையீட்டின் உத்தரவை அமலாக்குவதில் 90 நாட்களுக்கு மேல் ஏற்படும் காலதாமதத்திற்கு வழக்கமான 6 சதவீதத்திற்கு பதிலாக 9 சதவீத விகிதத்தில் வட்டி வழங்குவது.

 

 • சட்டப்படி வரிசெலுத்துவதற்கான செலவைக் குறைக்கும் வகையில், குறிப்பாக சிறிய அளவிலான வரி செலுத்துவோருக்கு ஈ சஹாயோக் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

 

சமூகத் துறை

 

 • சமையல் எரிவாயு இணைப்பு மகளிர் உறுப்பினர்கள் பெயரில் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.

 

 • குடும்பம் ஒன்றிக்கு ரூ.1 லட்சம் வரை யிலான மருத்துவ காப்பீடு வழங்குவதற்கான புதிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்.

 

 • 2016-17-இல் மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் புதிதாக 3,000 கடைகள் திறக்கப்படும்.

 

 • தேசிய ஆரோக்கிய இயக்கத்தின் கீழ் தேசிய டயாலிலிசிஸ் சேவைகள் திட்டம் தொடங்கப்படும்.

 

அடிப்படை வசதித் துறை

 

 • பிரதம மந்திரி கிராம சாலை திட்ட ஒதுக்கீடு ரூ.19,000 கோடியாக உயர்த்தப் படுகிறது.

 

 • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்காக ஒதுக்கீடு ரூ.38,500 கோடியாக உயர்த்தப்படுகிறது.

 

 • நிதிக் குழு பரிந்துரைகளின்படி கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கீடு மிக உயரிய அளவாக 228 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

 

 • ஷியாம பிரசாத் முகர்ஜி கிராமப்புற நகர்புற இயக்கத்தின்படி (ரூர்பன்) 300 கிராமப்புற நகர்புற தொகுப்புகள் உருவாக்கப்படும்.

 

வரிகள்

 

 • ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள்.

 

 • ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்து வோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிலிருந்து ரூ. 5,000 மாக உயர்த்தப்படுகிறது.

 

 • வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாடகை இனத்தை பொருத்தவரை வருமானத்தில் இருந்து குறைப்பு செய்யும் தொகை ரூ.20,000 லிலிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது.

 

 • 60 சதுர மீ பரப்புக்கும் குறைவான பரப்புள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தல்.

 

 • ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.

 

 • இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன் களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.

 

வேளாண்மை

 

 • விவசாயிகள் நலனிற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.35,984 கோடி

 

 • பிரதம மந்திரி விவசாயப் பாசன திட்டம் வலுப்படுத்தப்பட்டு மக்கள் இயக்க அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

 

 • நபார்டு உதவியுடன் அர்ப்பணிக்கப்பட்ட நீர் பாசன நிதியம் ரூ.20,000 கோடி அளவிற்கு அமைக்கப்படுகிறது.

 

 • டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.

 

 • கல்வி, திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம்

 

 • தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம் 76 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

 

1500 பல் திறன் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்

 

 • கல்வி சார்ந்த மின்னணு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஒரே இடமாக செயல்படுவதற்காக டிஜிட்டல் அடிப்படை சேமிக்கும்

 

அமைப்புகள் உருவாக்குதல்.

 

 • பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் படி அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் நோக்கம்.

 

 • அனைத்து புதிய ஊழியர்களுக்கும் முதல் மூன்றாண்டுகளுக்கு33 சதவீத ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்கினை அரசே வழங்கும் திட்டம்.

 

 • மாற்றத்திற்கான அலுவல் பட்டியல் அடிப்படையில் 9 தூண்களுடன் உருவாக்கப் பட்டவை பட்ஜெட் திட்டங்கள் :

 

 • ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை முக்கிய கவனமாக கொண்ட வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்.

 

 • வேலைவாய்ப்பை முக்கிய கவனத்தில் கொண்ட ஊரகத்துறை.

 

 • சமூக நலத் துறை.

 

 • இந்தியாவை உற்பத்தி சமுதாயமாக மாற்றுவதற்கான கல்வித் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல்.

 

 • திறமையான செயல்பாட்டிற்கும் தரமான வாழ்க்கைக்கும் அடிப்படை வசதி மற்றும் முதலீடுகள்.

 

 

 • நிதித் துறை சீர்திருத்தங்கள்.

 

 • ஆட்சி முறை மற்றும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல்.

 

 • நிதிக் கட்டுப்பாடு.

 

 • வரிச் சீர்திருத்தங்கள்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]