Ettuthogai Noolgal | TNPSC | TET Study Materials

எட்டுத்தொகை நூல்கள்

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 tamil-grammar

  • சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
  • கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.
  • இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்.
  • சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
  • பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத் தருகின்றன.
  • 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப்பெற்றன.
  • சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

 

Click Here To Get More Details