Study Materials

எழுத்து | eluthu

tamil-grammar

முதலெழுத்து

  • ‘அ’– முதல்‘ஔ’  வரையுள்ள உயிரெழுத்துகள் 12-ம் , ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துகள் 18 – ம் ஆன 30 எழுத்துகளும் , முதலெழுத்துகளாகும் . இந்த 30 எழுத்துகளும் சேர்ந்து , 216 உயிர்மெய் எழுத்துகள் உருவாக காரணமாக இருப்பதால் , இவை முதலெழுத்துகள் என்றழைக்கப்படுகின்றன .
  • ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும்

க்முதல்ன் வரையுள்ள பதினெட்டு மெய்யெழுத்துகளும்

ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

  • மொழிக்கு உயிர் போன்றவை உயிரெழுத்துகள். உடல் போன்றவை மெய்யெழுத்துகள். இவை 216 உயிர் மெய்யெழுத்துகள் தோன்ற அடிப்படையாய் உள்ளன. இவ்வாறு மொழிக்கு முதற்காரணமாய விளங்குவதால் இவை முதலெழுத்துகள் என்று வழங்கப்படுகின்றன.

மாத்திரை

  • எழுத்துகள் ஒலிக்கப்படும் , கால அளவு மாத்திரை எனப்படும் . இயல்பாக நாம் கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்க ஆகும் நேரமே ஒரு மாத்திரை எனப்படும்
  • .எழுத்தின் சாரியை ஒலிக்கும்போது ஓசை இனிமைக்காகவும் எளிமைக்காகவும் சாரியை சேர்ந்து ஒலிக்கப்படும்.
  • கரம், காரம், கான், அகரம் என்பன எழுத்தின் சாரியைகள் ஆகும்.
  • எழுத்துகள் பெறும் சாரியைகள் குறித்துப் பின்னர்க் காண்போம்.

 

  1. உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகளை , குறில் , நெடில் என இருவகையாக பிரிக்கலாம் .

 

குறில் நெடில்

குறில்

  • குறுகிய ஓசையினை உடைய எழுத்துகள் .
  • ஒரு மாத்திரை கால அளவில் ஒலிக்கும்

நெடில்

  • நீண்ட ஓசையினை உடையது .
  • இரண்டு மாத்திரை நேரத்தில் ஒலிக்கும் .
  • உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறிலெழுத்து அல்லது குற்றெழுத்து என்றும்
  • ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும்.
  • குறிலெழுத்துகள் சற்று ஒலித்தே நெட்டெழுத்துகளாக மாறுகின்றன.
  • எனவே ஒவ்வொரு நெட்டெழுத்திற்கும் அதற்குரிய குறிலெழுத்து இனவெழுத்தாகும்.
  • ஐ, ஔ ஆகிய இரு நெட்டெழுத்துகளுக்கும் தனியே குற்றெழுத்தின்மையால் ஐகாரத்திற்கு இகரமும், ஔகாரத்திற்கு உகரமும் இனக்குறிலெழுத்தாகக் கொள்ளப்படும்.
  • உயிர்க் குற்றெழுத்துகள் கரம், காரம், கான், ஆகிய மூன்று காரியைகளையும் பெறும்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker