இந்திய அரசியலமைப்பின் கூறுகள்

  • இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும்(Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து.
  • அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.