மின்னோட்டவியல் | electromagnetism - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

மின்னோட்டவியல் | electromagnetism

maanavan 4

மின்னியல்

  • நேர்மின்சுமை, எதிர்மின்சுமைஎன்றஇருமின்சுமைகள்உள்ளன.
  • மின்னூட்டங்களின்ஓட்டமேமின்னோட்டம்(CHARGE)எனப்படும்.
  • கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியேமின்னூட்டம் பாயும் வீதமே மின்னோட்டம் (Electric current) அல்லதுஓட்ட மின்சாரம் (Current electricity) என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு துகளும் ஒரு குறிப்பிட்டளவுமின்னூட்டம்(charge, மின் ஏற்பு, கொண்டிருக்குமாகையால், ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் கடந்து செல்கின்றது என்பதுதான் மின்னோட்டத்தின் அளவு ஆகும்.
  • அதாவது,கடத்திஒன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழியே மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் ஆகும்.

விளக்கம்:

  • ஆறுகளில்நீர் ஓடுவதை நீரோட்டம் என்பதைப் போல எதிர் மின்தன்மை கொண்ட மின்னன்கள்/ இலத்ரான்கள் நகர்ந்து ஓடுவது மின்னோட்டம் ஆகும். நீர் அழுத்தத்தின் காரணமாக, நீரோட்டம் மேல் இருந்து கீழே பாய்வது போல அதிக மின்னழுத்தம் கொண்ட இடத்திலிருந்து மின்னழுத்தம் குறைவான பகுதிக்கு மின்னோட்டம் பாய்கின்றது.

மின்னோட்ட அலகு ஆம்பியர் மின்னோட்டம்

  • மின் தன்மையில் இரு வகை இருப்பதால், எந்த வகை மின் பொருள் நகர்ந்தாலும் மின்னோட்டம் நிகழும்.
  • மின்னோட்டமானதுஆம்பியர் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. ஓர் ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு ஒரு கூலம் அளவு மின்னூட்டம் ஒரு தளத்தைக் கடக்கும் ஓட்டம் ஆகும்.
  • மின்னோட்டச் செறிவுஎன்பது அலகு பரப்பளவைக் கடக்கும் மின்னோட்டத்தின் அளவாகும்.அதாவது, எத்தனை ஆம்பியர் மின்னோட்டம் ஒரு சதுர செ.மீ பரப்பைக் கடந்து செல்கின்றது என்பது மின்னோட்டச் செறிவு ஆகும்.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.