மின்காந்த அலை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மின்காந்த அலைகளும்

Electromagnetic waves 

 • மின்காந்த அலைகளும்
 • மின்காந்த நிறமாலை
 • நிறமாலைகளின் வகைகள்
 • குவாண்டம் கொள்கை
 • இராமன் விளைவு
 • ஃ பெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகள்

மின்காந்த அலைகளும்

 • ஃபாரடேயின் மின்காந்தத் தூண்டல் நிகழ்வானது காலத்தைப் பொருத்து ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புல மாறுபாடு, அந்தப் புள்ளியில் ஒரு மின்புலத்தை உருவாக்கும் என விளக்கியது.
 • மாக்ஸ்வெல் 1865 ல் இயற்கையில் ஒரு ஒத்த அமைப்பு (Symmetry in nature) உள்ளது. என சுட்டிக் காட்டினார். அதாவது காலத்தைப் பொருத்து ஒரு புள்ளியில் ஏற்படும் மின்புல மாறுபாடு அந்தப் புள்ளியில் காந்தப்புலத்தை உருவாக்கும் இதற்கு காலத்தைப் பொருத்து ஒரு புலத்தில் (மின் அல்லது காந்த) ஏற்படும் மாறுபாடு மற்றொரு புலத்தை உருவாக்கும் என்பதாகும்.
 • ஒன்றுக்கொன்று செங்குத்தாக ஏற்படும் மின் மற்றும் காந்தப்புல மாறுபாடுகள மின்காந்த மாறுபாடுகளை வெளியில் (space) உருவாக்கும் என்ற முடிவினை மாக்ஸ்வெல் மேற்கொள்ள மேற்குறிப்பிட்ட கருத்து வழிவகை செய்தது.

மின்காந்த நிறமாலை (Electromagnetic spectrum)

 • ஹெர்ட்ஸ், மின்காந்த அலைகளை உருவாக்கிக் காட்டியபிறகு பல்வகை கிளர்ச்சிகள் (excitation) மூலமாக, பல்வேறு அலைநீளப் பகுதிகளில் மின்காந்த அலைகள் தோற்றுவிக்கப்பட்டன
 • அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்
 • மின்காந்த நிறமாலை அகன்ற நெடுக்கம் கொண்ட அலைநீளங்களை அல்லது அதிர்வெண்களைக் கொண்டது மின்காந்த நிறமாலைகள் அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளாகவும், துணைப் பிரிவுகளாகவும், கிளர்ச்சி நிலைக்குத் தக்கவாறு அலைநீளத்தின் ஏறு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன அனைத்து மின்காந்த அலைகளும் ஒளியின் திசைவேகத்தில் செல்கின்றன. மின்காந்த அலைகளின் இயற்பண்புகள், அதன் அலைநீளத்தைப் பொருத்து அமையும் ஆனால் கிளர்ச்சி நிலையின் தன்மையைப் பொருத்து அமையாது. சில நிறமாலை வரிசைகள் ஒன்றன் மீது மற்றொன்று பொருந்துவது, அவை வெவ்வேறு முறைகளில் உருவாவதை குறிக்கிறது

நிறமாலைகளின் வகைகள் (Types of spectra)

 • நிறமாலைமானியில் வைக்கப்பட்ட முப்பட்டகமொன்றின் மீது வெள்வொளி படும்போது, பல்வேறு அலைநீளங்கள் உடைய அலைகளாக வெவ்வேறு திசைகளில் திசைமாற்றம் அடைகின்றன. தொலைநோக்கியின் எல்லைக்குள் பிளவையின் பிம்பங்கள் பல வண்ணங்களில் கிடைக்கும் இத்தகைய பிம்பங்களையே நிறமாலை என்கிறோம்
 • சோடிய ஆவி விளக்கினால் ஒளியூட்டப்படும் பொழுது பிளவையின் இரண்டு பிம்பங்கள் நிறமாலையில் மஞ்சள் றிநப்பகுதியில் கிடைக்கின்றன இந்த சோடியம் வெளிவிடு வரிகளின் அலைநீளங்கள் முறையே 5896 A மற்றும் 5890 A இது சோடியத்தின் நிறமாலை என்று அழைக்கப்படுகின்றது

 

Click Here to Download