மின்காந்தம் | tnpsc study materials

Deal Score0

maanavan physics

 • மின்னோட்டம் செல்லும்பொது பொருள் காந்தமாக்கப்பட்டால், அது மின்காந்தம் எனப்படும்.
 • மின்னோட்டம்பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும்காந்தம் மின்காந்தம் எனப்படும்.
 • இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போதுகாந்தப்புலம்மறைந்துவிடும். மோட்டர்கள்,மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள்வன்வட்டுக்கள்காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
 • மேலும்கைத்தொழிற்துறையில்அதிக அடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
  • கம்பியியொன்றினூடு பாயும் மின்னோட்டம்(I) காந்தப்புலமொன்றை(B) தோற்றுவிக்கிறது. புலமானது வலக்கைவிதிக்கமைவாக திசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கம்பியொன்றில் பாயும்மின்னோட்டமானதுஅக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது.
  • காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில், கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். அப்போது கம்பியின் ஒவ்வொரு முறுக்கினாலும் உண்டாக்கப்படும் காந்தப்புலமானது சுருளின் மையத்தினூடாகச் சென்று ஒரு உறுதியான காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கிறது.
  • குழாய் வடிவிலான கம்பிச்சுருள் வரிச்சுருள் எனப்படும். சுருளின் உள்ளே மெல்லிரும்பு போன்ற அயக்காந்தப் பொருளை வைப்பதன் மூலம் வலிமையான காந்தப்புலத்தை உருவாக்க முடியும். அயக்காந்தப் பொருளின் காந்த ஊடுபுகவிடுதிறன் உயர்வு என்பதால் சாதாரணச் சுருள் உருவாக்கும் காந்தப்புல வலிமையிலும் அயக்காந்த அகணியின் காந்தப்புல வலிமை ஆயிரம் மடங்கு அதிகமாகும். இந்த அயக்காந்த அகணி அல்லதுஇரும்புஅகணி மின்காந்தமென அழைக்கப்படும்.
Click Here To Get More Details