மின்னோட்டவியல்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மின்னோட்டவியல்

Electricity 

 • மின்னோட்டவியல்
 • மீக்கடத்துத் திறன்
 • மின்சுற்று
 • கிர்ச்சஃப் விதிகள்
 • மின்னாற்றல் மற்றும் மின்திறன்
 • மின்னோட்டவியலும் ஆற்றலும்
 • மின் அதிர்ச்சி
 • மின் உருகியின் பங்கு
 • மின்னாற் பகுப்பு
 • மின்கலன்களின் வகைகள்

மின்னோட்டவியல்

 • மின்னூட்டங்களின் இயக்கத்தைப் பற்றி விளக்கக்கூடிய இயற்பியலின் ஒரு பிரிவு மின்னோட்டவியலாகும்.
 • மின்னூட்டம் பெறாத உலோகக் கடத்தி ஒன்றில் அணுக்கருவுடன் இறுக்கமாக பிணைக்கப்படாத ஒரு சில எலக்ட்ரான்கள். ஒழுங்கற்ற முறையில் இங்கும் அங்குமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.
 • பொருளின் வெப்ப இயக்க அக ஆற்றல் போதுமானதாக இருப்பதால். தனித்தனியான அணுக்களின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் விடுவிக்கப்பட்டு பொருளின் வழியே இயங்குகின்றன.
 • ஆனால், எந்த ஒரு புள்ளியிலும், மின்னூட்டம் நிகழாது. இந்த எலக்ட்ரான்கள் கட்டுறா எலக்ட்ரான்கள் (free electrons) எனப்படும்

மீக்கடத்துத் திறன் (Super conductivity)

 • சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலைகளில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலைகளில், ஒரு சில உலோகங்கள், அவைகளின் சேர்மங்கள் மற்றும் உலோகக் கலவைகளின் மின்தடை சுழி மதிப்பை அடையும், சுழி மின்தடையுடன் மின்னோட்டத்தைக் கடத்தும் அவற்றின் தன்மை மீக்கடத்துத்திறன் எனப்படும். இப்பண்பை வெளிப்படுத்தும் பொருள்கள் மீக்கடத்திகள் எனப்படும்.
 • மீக்கடத்துத் திறனை முதலில் காமர்லிங்க் ஓன்ஸ் என்பவர் 1911 ல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் பாதரசத்தின் மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவதைக் கண்டறிந்தார் 1957 ல் பர்ட்ன், கூப்பர், ஸ்கரைஃபர் ஆகியோரால் மின்கடத்தும் பண்புக்கான கொள்கை விளக்கம் தரப்பட்டது. இது BCS கொள்கை எனப்படும்.

மின்சுற்று

 • மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையில் இருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.
 • மின்சுற்று என்பது பொதுவாகப் பின்வருவனவற்றால் உருவாக்கப்படும்.
 • மின்கலம் (அ) மின்கல அடுக்கு – மின்னோட்டத்தைத் தரும்
 • இணைப்புக்கம்பிகள் – மின்னோட்டத்தை எடுத்துச் செல்ல
 • மின்விளக்கு – போன்ற மின்னாற்றலைப் பயன்படுத்தும் அமைப்பு – மின்னோட்டத்தைத் தேவையான போது செலுத்தவோ, நிறுத்தவோ பயன்படும் அமைப்பு.

 

Click Here to Download