மின்சுற்று | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின்சுற்று | tnpsc study materials

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 • மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையில் இருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.
 • மின்சுற்று என்பது பொதுவாகப் பின்வருவனவற்றால் உருவாக்கப்படும்.
 1. மின்கலம் (அ) மின்கல அடுக்கு – மின்னோட்டத்தைத் தரும்
 2. இணைப்புக்கம்பிகள் – மின்னோட்டத்தை எடுத்துச் செல்ல
 3. மின்விளக்கு – போன்ற மின்னாற்றலைப் பயன்படுத்தும் அமைப்பு – மின்னோட்டத்தைத் தேவையான போது செலுத்தவோ, நிறுத்தவோ பயன்படும் அமைப்பு.
 • மின்னோட்டம் செல்லும்போது மின்சுற்று மூடிய சுற்று எனவும் மின்னோட்டம் செல்லாதபோது மின்சுற்று திறந்த சுற்று எனவும் கூறலாம்.

மூன்று வகையான மின் சுற்றுகள்

 1. எளிய மின்சுற்று
 2. தொடரிணைப்புச் சுற்று
 3. பக்க இணைப்புச் சுற்று

எளிய மின்சுற்று

 • ஒரு மின்கலம், ஒரு மின்விளக்கு மற்றும் மின்பொத்தான் ஆகியவை கொண்ட ஒரு சுற்று ஒரு எளிய மின்சுற்று எனப்படும்.

தொடரிணைப்புச் சுற்று

 • ஒவ்வொரு மின்விளக்கின் முனையும் மற்றொரு மின்விளக்கின் முனையோடு தொடர்ச்சியாக இணைக்கப்பட்டிருப்பது தொடரிணைப்புச் சுற்று எனப்படும்.
 • இதில் மின்னோட்டம் ஒரே திசையில் பாய்கிறது.
 • மேலும் அனைத்து மின்விளக்குகள் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாய்கிறது.
 • இச்சுற்றில் ஏதேனுமொரு மின்விளக்கு எடுக்கப்பட்டாலோ, பழுதானாலோ மற்ற மின் விளக்குகள் ஒளிராது.
 • ஏனெனில் ஒரு மின்விளக்கு இல்லாவிட்டாலும் இந்த மின்சுற்று முழுமையடையாது. இதனால் எந்த மின்விளக்குகளுக்கும் மின்சாரம் செல்லாது.

பக்க இணைப்புச் சுற்று

 • ஒவ்வொரு மின்விளக்கும் தனித்தனியாக மின்கம்பிகள் மூலம் மின்கலத்தின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மின்சுற்று பக்க இணைப்புச்சுற்று எனப்படும்.
 • இத்தகைய மின் சுற்றில் ஒவ்வொரு மின்விளக்கின் வழியேயும் வெவ்வேறு அளவு மின்சாரம் பாய்கிறது.
 • இச்சுற்றில் ஏதேனுமொரு மின்விளக்கு எடுக்கப்பட்டாலோ, பழுதானாலோ மற்ற மின் விளக்குகள் ஒளிரும். ஏனெனில் மற்ற மின் விளக்குகளுக்கு, மின்சாரம் செல்லத் தனிப் பாதை உள்ளது.
 • நமது வீடுகளில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் பக்கச்சுற்று முறையிலேயே இணைக்கப்படுகின்றன. ஏனெனில் பக்கச் சுற்றிலேயே ஒவ்வொரு மின்சாதனமும் தனித்தனியாக மின்சாரத்தைப் பெற ஏதுவாகும். நாம் ஒரு சாதனத்தை நிறுத்தினாலும் மற்ற மின்சாதனங்கள் தொடர்ந்து இயங்கும்.
Click Here To Get More Details