தேர்தல்கள்

  • இந்தியாவில் நாம் பின்பற்றி வரும் தேர்தல் முறை, இங்கிலாந்தின் தேர்தல் முறையை ஒட்டியே அமைந்துள்ளது.
  • தேர்தல்களை நடத்தவும், கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் வயதுற்றோர் வாக்குரிமையின் அடிப்படையில் நடைபெறும்.
  • அதாவது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது பொருத்தமான சட்ட அவையினால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், குடியிருக்காமை, மனநலமின்மை, குற்றம், முறைகேடான, சட்டவிரோதமான நடவடிக்கை ஆகிய காரணங்களுக்கான தகுதி இழக்காதவரும், எந்தத் தேர்தலிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்படத் தகுந்தவராவார் .
  • அரசியலமைப்பின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
  • தேர்தல் ஆணையம், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையும், அவ்வப்போது குடியரசுத் தலைவர் வதிக்கும் ஏதாவதொரு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர்களையும் உள்ளடக்கி இருக்கும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.