மார்க் குறைந்தாலும் மார்க்கமுண்டு விரிந்திருக்கும் கல்வி வாய்ப்புகள் - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மார்க் குறைந்தாலும் மார்க்கமுண்டு விரிந்திருக்கும் கல்வி வாய்ப்புகள்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

 • பல பெற்றோர்கள் தன் பிள்ளைகள் என்ஜினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்கள், மதிப்பெண் குறைந்ததும் தகுதியின் அடிப்படையில் போகமுடியாத சூழலிலும், நிர்வாக ஒதுக்கீட்டில் போவதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் கவலை கொள்கிறார்கள். மேலும் இன்று கலைக் கல்லூரியில் படிப்பது எதோ சும்மா இருப்பதற்கு பதில் படிப்பது என்ற தவறான கருத்தும் சில பெற்றோர்களிடம் காணப்படுகிறது.

 

2016-08-11_18-45-46

 

 

 • ஆர்வத்திற்கு ஏற்ற சரியான இளநிலை படிப்பை தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் படித்து அதன்பின் முதுநிலைப் படிப்பை முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ, தொலைதூரக்கல்வி வழியிலோ படித்திக்கொண்டே இளநிலை படிப்பைக்கொண்டு உங்கள் துறை சார்ந்த வேலைக்கு போகமுடியும். இரண்டு ஆண்டுகள் படித்து முடித்ததும், முதுநிலை கல்வியுடன் வெளியில் வரும்போது இரண்டு ஆண்டுகள் வேலைப்பார்த்த அனுபவமும் இருக்கும்.  இளநிலை படிக்கும்போதே உங்கள் துறை சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உங்கள் துறை சார்ந்த அறிவை விசாலமாக்கிக் கொள்ளவேண்டும்.  உங்கள் படிப்பு என்பது வேலைக்கு செல்லும்பொழுது ஓரு 20 சதவீதம் மதிப்பு கொண்ட ஒரு தகுதிதானே தவிர, வேலை கிடக்க மீதி 80 சதவீதம் உங்கள் தனிப்பட்ட திறமையும், அறிவும் மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும். எனவே, பொறியியல் படிப்பிற்கு இணையான மதிப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் படிப்புகளுக்கும் உள்ளது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.
 • எப்போதுமே அனைவரும் தேர்ந்தெடுக்கும் படிப்பைவிட வேலைவாய்ப்பு வழங்கும் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது வேலைவாய்ப்பிற்கு மிகவும் பயன்படும்.
 • கலை அறிவியல் படிப்புகளில் இன்றைய அளவில் வேலைவாய்பு அதிகம் உள்ள சில படிப்புகளை இங்கே பார்ப்போம்:

 

மொழியியல் துறை :

 

 • உலகளாவிய பொருளாதாரம் கொண்ட இன்றைய காலக்கட்டத்தில் மொழியியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மத்திய – மாநில அரசுத் துறைகளில் பன்மொழி அறிவு உடைய தகுதியுடையவர்களுக்கு எப்போதும் தேவை இருக்கிறது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், விமானத்துறை, கப்பல் துறை, மென்பொருள் நிறுவனங்கள், கலை மற்றும் கலாச்சாரத்துறை, ஹோட்டல் மேலாண்மை, செயலாளர்-உதவியாளர் பணிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான மொழிபெயர்ப்பாளர், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பல துறைகளில் அறிவிப்பாளர் பணிகள் மற்றும் பத்திரிகை என்று மொழியியல் படித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.
 • இதற்கு ஆங்கிலம், தமிழ் மொழிப்புலமையுடன் வேறு ஒரு மொழிமையை கற்றுக்கொள்வது நல்லது. உதாரணமாக, B.A (Bulgarian), B.A.(Chinese), B.A.(Urdu), B.A. (Arabic) போன்று ஏதாவது ஒரு இளநிலைப் படிப்பை முதுநிலைப் படிப்பை தொடந்து முடித்துவிடுவது நல்லது.
 • இது படிப்பதற்கு செலவும் குறைவு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளும் எளிதாகக் கிடைக்கும்.
 • பேச்சு மற்றும் மொழி நோய் ஆராய்ச்சி (Speech and Language Pathology)
 • இந்தியாவில் இன்று 5 முதல் 8 விழுக்காடு வரை மக்களுக்கு பேச்சு , மொழி சம்பத்தமான குறைபாடு இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தப் படிப்பை படித்து பயிற்சி பெற்றவர்களை Speech-Language Pathologists (SLPs) அல்லது  Speech Language Therapists (SLTs) என்று அழைப்பார்கள். இவர்கள் பேச்சு உருவாகும் விதம், குரல், உச்சரிப்புப் பிரச்சினைகள், திக்குவாய் போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை வழங்குவார்கள். இது மிகவும் அதிகம் தேவையான அதே சமயத்தில் போட்டிகள் அதிகம் இல்லாதத் துறையாகும்.

 

 • இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று வாய்ப்புகளைப் பெற கீழ்கண்ட படிப்புகளை படிக்கவேண்டும்:

 

 • BASLP (Bachelors in Speech Language Pathology and Audiology) என்பது நான்கு வருடப் படிப்பாகும். இதற்கு கல்வித்தகுதி +2 அல்லது அதற்குச் சமமான ஒரு தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல் பாடங்களை ஏற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

 

 • Sc. (Hons) Speech Hearing. இது மூன்று வருடப் படிப்பாகும்.

 

 • இளநிலைப் படிப்பை முடித்தவர்கள் SC, M.Ed. மற்றும் முனைவர் பட்டம் வரை படித்து பல்வறு வளர்ச்சிகளை அடையலாம்.

 

 • விருந்தோம்பல் மற்றும் இல்லப் பராமரிப்பு (Hospitality & Housekeeping)

 

 • இந்தியாவில் இன்று மெடிக்கல் டுரிசம் வளர்ச்சியால் இந்தியாவிற்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மென்பொருள் துறை, தொழில் துறை போன்றவற்றால் தாங்கும் விடுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் வரும் விருந்தினைரை உபசரித்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அதிகம் பேர் தேவைப்படுகிறார்கள். மேலும் உணவகங்கள், தங்குமிடம், சூதாட்ட விடுதிகள், உணவு பரிமாறும் அமைப்புகள், விடுமுறை காலத் தங்குமிடங்கள், சுற்றுலாப் பயணிகளோடு தொடர்புடைய பல இடங்களில் விருந்தோம்பல் சார்ந்த வேலைகள் அதிகமாக உள்ளன.

 

 • இதில் ஆர்வமுள்ளவர்கள் Sc. (Hospitality & Hotel Administration) என்ற மூன்று வருடப் படிப்பை படிக்கலாம். அல்லது Advance Diploma in Hospitality, certificate Course in Institutional Hospitality Management போன்ற உங்கள் விருப்பத்திற்கு  ஏற்ப ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

 

உளவியல் (Psychology):

 

 • மனிதனின் மனம் எப்படி இயங்குறது என்பதைப் பற்றி ஆராய்வதே இந்த படிப்பின் நோக்கமாகும். இது மனிதனின் மனம் வேலை செய்யும் விதம மற்றும் நடத்தை போன்றவற்றை அறிந்து அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் முறையை சொல்லிக்கொடுக்கிறது. இது சமூகம், குழந்தை, தொழில், சிகிச்சை, பரிசோதனை, கல்வி பல்வேறு சிறப்பு உளவியல் துறைகள் உள்ளன.

 

 • இதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கல்லூரியில் A (Psychology)  மூன்று ஆண்டு படிப்போ அல்லது வேறு பதட்டம், பட்டைய படிபுகலோ படிக்கலாம்.

 

 • இந்தப் படிப்பை படித்து முடித்ததும் சுகாதாரத்துறை, மனநல மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்களின் அலுவல்கள், போதை-குடி ஆகியவற்றிக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

சமையல் கலை (Catering)

 

இன்று இந்தியாவில் பல்வேறு நாட்டு உணவு வகைகளை ருசிக்கும் மக்கள் அதிகமாகிவிட்டார்கள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலையில் இன்று பெரும்பாலும் உணவகங்களில் உண்ணும் பழக்கமும், பண்டிகை மற்றும் விழாக்களை கொண்டாட ஹோட்டல்களுக்கு செல்லும் வழக்கமும் அதிகமாகியுள்ளது. இன்று தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வரும் நிலையில் பன்னாட்டு உணவுடன் விடுதிகள் வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இதில் பணி புரியவும், வெளிநாடுகளில் சென்று ருசியான உணவுகளை செய்து வாடிக்கையாளர்களின் தேவைகளை அளிக்கும் கேட்டரிங் இன்று மிகவும் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறையாகும். இத்துடன், ஆங்கில அறிவும் இருந்தால் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது.

 

 • இதனால் இந்தப் படிப்பு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

 

இதில் கீழ்காணும் படிப்புகள் வழங்கப்படுகின்றன:

 

 • B.Sc. (Catering & Hotel Management ) – மூன்று ஆண்டுகள்
 • B.Sc. (Catering)
 • Certificate Course In Catering and Hotel Management
 • Diploma (Catering & Hotel Administration) -2 ஆண்டுகள்
 • Diploma (Catering Technology) – 2 ஆண்டுகள்
 • Certification Course in Bakery & Confectionery)

இதில் படித்தவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட துறைகளில் வேலைவாய்ப்பை பெறலாம்:

 • பயணக் கப்பல்கள்
 • உணவகங்கள், தங்குமிடங்கள்
 • விமான கேட்டரிங் நிறுவனங்கள்
 • ரயில் கேடரிங் நிறுவனங்கள்
 • வங்கி கேட்டரிங் நிறுவனங்கள்
 • ராணுவ கேட்டரிங் நிறுவனங்கள்
 • மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் சார்ந்த கேட்டரிங் அலுவலக வாய்ப்புகள்

 

 • எனவே, அனைவரும் பொதுவாக படிக்கும் படிப்பைவிட போட்டிகள் குறைவாக உள்ள, அதே நேரத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள அநேகத் துறைகளை தேர்ந்தெடுத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!