Distribution of TNTET Application Forms

ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்

Distribution of  TNTET Application Forms

  • ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகிய முறையே ஏப்ரல் 29, 30 ஆகிய நாள்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
  • இதற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மையங்களின் விவரங்களைக் காணலாம்.
  • ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இரு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள்:-

  • அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எண் 9, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி.
  • அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப்பள்ளி, எண்.779, அண்ணா சாலை.
  • பி.டி.லி. செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப்பள்ளி, எண். 5, ஜெனரல் காலின்ஸ் சாலை, சூளை.
  • தொன்பாஸ்கோ மேல்நிலை ப்பள்ளி, எண். 31, வேப்பேரி நெடுஞ்சாலை,வேப்பேரி.
  • மலையாள வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி, எண்.52, வெங்கிடதிரி தெரு, குயப்பேட்டை, புரசைவாக்கம்.
  • டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி, எண்.97, மின்ட் தெரு, சௌகார்பேட்டை.
  • பச்சையப்பா கல்லூரி மேல்நிலைப்பள்ளி, எண். 187, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிராட்வே.
  • சென்னை உயர்நிலைப் பள்ளி, எண். 109, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.
  • சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.76, 2-ஆவது தெரு, காமராஜ் அவென்யு, அடையாறு.
  • கேசரி மேல்நிலைப்பள்ளி, எண்.8, தியாகராயா சாலை, தியாகராய நகர்.
  • அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, எண்.152, உஸ்மான் சாலை, தியாகராய நகர்.
  • காவேரி உயர்நிலைப்பள்ளி, எண்.5, பாரதியார் தெரு, சாலிகிராமம்.
  • சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.53, மேற்கு ஆற்றுச்சாலை, சிந்தாதிரிப்பேட்டை.
  • அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு ஜெகன்னாத நகர், வில்லிவாக்கம்.
  • கணபதி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எண்.28, காரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம்.
  • சென்னை உயர்நிலைப்பள்ளி, எண். 21, சோமையா ராஜா தெரு, அகரம்.
  • ஸ்ரீ சம்பாலால் பகாரியா ஜெயின் மேல்நிலைப்பள்ளி, எண்.200, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர்.

பூர்த்தி செய்து அளிக்க..!

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 23-ஆம் தேதி வரையுள்ள காலை 9 முதல் மாலை 5 மணி வரை திரும்ப பெறப்படும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பதை அளிக்கலாம்.
  • மாவட்ட கல்வி அலுவலகங்கள் (வட சென்னை, தென் சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்.
  • சிஎஸ்ஐ ராஜகோபால் மேல்நிலைப் பள்ளி, எண் 34, கிழக்கு கல் மண்டபம் தெரு, ராயபுரம்.
  • மாவட்டக் கல்வி அலுவலகம், மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம்.