இயலாதோர் நலன் தொடர்பான சரத்துக்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • சரத்து 41 – அரசுக்குத் தன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப வேலையற்றவர்களுக்கு, வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இயலாதோர்கள் ஆகியோர்க்குப் பணியாற்றுவதற்கு கல்வி பெறுவதற்கும் மற்றும் பொதுவான உதவி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது.
  • உடல், மன இயக்கத்தில் குறைபாடுடையோர், இயலாதோர் ஆவார்கள். குறிப்பாக கண், வாய், உடல் மற்றும் மூளைக்குறைபாடுகள் உள்ள இயலாதோர்க்கு அரசு, நலத்திட்டங்கள் வழியே அவர்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
  • கோத்தாரி கல்விக்குழு (1966) கல்வியை இயலாதோருக்கு, பயனளிக்கும் வகையில் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
  • 1986 மற்றும் 1992 தேசியக் கல்விக் கொள்கைகளில் இயலாதோர்களுக்கான சிறப்புக் கல்விக்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
  • 1956 ஆம் ஆண்டு, சமூக நலத்துறை, இயலாதோர் சிறப்புக் கல்விப் பொறுப்பை மேற்கொண்டது.
  • 1971 இல் இயலாதோர் ஒருங்கிணைப்புக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
  • 1987 ஆம் ஆண்டு, இதனைக் கல்வித் துறைக்கு மாற்றி அமைத்தனர். அரசுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]