நேரடி பண மாற்றத் திட்டம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நேரடி பண மாற்றத் திட்டம்

Direct Cash Transfer Scheme

  • இந்தியாவில் சேவை வழங்கும் முறையில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான புதிய மந்திரம்தான் நேரடிப் பண மாற்றத் திட்டமாகும். (DCT- Direct cash Transfer Scheme) எனினும், நேரடிப் பணமாற்றம் என்பது புதிய விஷயமும் இல்லை (கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவை நேரடி பணமாற்றத் திட்டங்கள்தான்)… பரபரப்பான விளம்பரங்களுடன் 21 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப் பட்டிருக்கும் நேரடி பண மாற்றத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள எந்த திட்டமும் ஏற்கெனவே நேரடி பண மாற்ற முறையில் இல்லாமல் இருந்தவை அல்ல. எனவே, இப்போது எழுந்துள்ள விவாதம் என்னவென்றால், தற்போது நடை முறையில் உள்ள உணவு மானியம், உர மானியம், எண்ணெய் மானியம் ஆகியவற்றை பணமாக மாற்றி நேரடி பணமாற்றத் திட்டத்தின்படி பயனாளிகளுக்கு அனுப்ப முடியுமா? என்பதுதான். தத்துவார்த்த அடிப்படையில் பார்க்கும்போது, நேரடி மானியமாக வழங்கப் படும் பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்ததற்கு இணை யான பொருட் களையும், சேவை களை யும் பெறமுடியும் பட்சத்தில், நேரடி பண மானியத் திட்டத்தை அறிமுகம் செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் அனைவருமே இதை மாய குண்டு என்றுதான் அழைக்கின்றனர். ஏனெனில், இது மானியத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதுடன், சேவை வழங்கும் முறையில் காணப்படும் முறைகேடுகளையும் களை வதுதான். நேரடி பண மாற்றத் திட்டத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் இன்னொரு வாதம். இப்போதுள்ள மானியங்கள் சந்தை சமநிலையை மாற்றியமைக்கும் வகை யில் இருப்பதால், புதிய முறை சிறப்பானதாக இருக்கும் என்று நம்பப்படுவதுதான்.
  • துரதிருஷ்டவசமாக, நேரடி பண மாற்ற முறைக்கு ஆதர வாகவும், எதிராகவும் முன்வைக்கப்படும் வாதங்கள் எதுவும் அனுபவத்தின் அடிப்படையிலானவை அல்ல. நேரடி பண மாற்ற முறைக்கு ஆதரவாக முன் வைக்கப்படும் வாதங்கள் அனைத்தும் தற்போதுள்ள மானிய முறை சம்பந்தப்பட்ட பயனாளிகளை சென்றடைவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இந்த வகை மானியத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அதிக செலவு பிடிக்கிறது. பொது வினியோக முறையில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதும், உணவுக் கழகம் மற்றும் பொது வினியோக முறையின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுதுவதும் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. எனினும், பொது வினியோக முறையில் வழங்கப்படும் உணவு தானியங்களில் பெரும்பாலானவை பணக்காரர் களையே சென்று சேர்கின்றன என்பது மிகவும் சிக்கலான வாதமாகும். இந்த விஷயத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில், போலிலியான பயனாளிகள் சேர்ப்பு என்பது தவறன தேர்வு முறையாலும், அர்த்தமின்றி நிர்ணயிக்கப்படும் உச்ச வரம்புகளாலும் ஏற்படுபவை ஆகும். இதை நேரடி பண மாற்ற முறையோ அல்லது ஆதார்  அடையாள அட்டைகளாலோ தீர்க்க முடியாது. மாறாக, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் மாநிலங்களில் முறைகேடுகள் பெருமளவில்  குறைந்திருப்பதை காண முடிகிறது. இந்த விஷயத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள் சொல்லும் சேதி என்ன வென்றால், வெளிச்சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்ததன் மூலம்தான் முறைகேடுகளை குறைக்க முடிந்தது என்பதுதான்.
  • அதுமட்டுமின்றி, பொதுவினியோகத் திட்டத்தின்படி வழங்கப்படும் பொருட்களை கொண்டு செல்லும் ஊர்திகளில் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துதல், நியாயவிலைக் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பை செல்பேசி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கச் செய்தல் ஆகியவையும் முறைகேடுகள் குறைந்ததற்கு காரணம் ஆகும். இந்த பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான முறைகள் மட்டுமின்றி, பொதுவினியோகத்திட்டத்தில் காணப்படும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான அரசியல் துணிச்சலும் தேவையாகும். மேலும், இந்திய உணவுக்கழகம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 2004-05-ம் ஆண்டைத் தவிர, மற்ற ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய உணவுக் கழகத்தின் விற்பனை விலை என்பது சந்தை விலையை விட மிகவும் குறைவு ஆகும். உற்பத்தியாளர்களுக்கு முழு கொள்முதல் விலையையும் வழங்குவதுடன், தனியார் துறையினர் செலுத்தாத பல வரிகளை செலுத்திய பிறகும், இந்திய உணவுக் கழகம் அளிக்கும் உணவு தானியங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்திய உணவுக் கழகத்திற்கு ஆகும் அளவுக்கு தனியாருக்கு செலவு பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், பொதுவினியோக முறைக்கு எதிராக வாதிடுபவர்கள் இரு அடிப்படை உண்மைகளை மறந்துவிடுகிறார்கள்.
  • முதலிலில், பொதுவினியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அதனால் பயனடையாதவர்கள்தான் அதிகமாக குற்றஞ்சாட்டுகிறார்களோ தவிர, இதனால் பயனடைபவர்கள் அதிகமாக குற்றஞ்சாட்டுவதில்லை. இரண்டாவதாக ஏழை மக்களுக்கு, குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு வாங்கும் சக்தியை அளிப்பது பொது வினியோக முறைதான். தேசிய மாதிரி கணக்கெடுப்பில் தெரிய வந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், நாங்கள் நடத்திய ஆய்வில் 2004-05-ஆம் ஆண்டிலிலிருந்து 2009-10-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வறுமையை ஒழிப்பதில் பொதுவினியோக முறைதான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதுதவிர, பொது வினியோகத் திட்டத்தின்படி உணவு தானியங்களை வாங்குபவர்கள் மட்டும்தான் அதிக  அளவில் உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகவே இந்திய மக்கள் உணவு எடுத்துக் கொள்ளும் விகிதம் குறைந்துவரும் நிலையில் இது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். பொதுவினியோகத் திட்ட உணவுப்பொருட்களை உட்கொள்பவர்களின் நுண்ணூட்டச் சத்து அளவு அதிகரித்திருக்கிறதா? என்பதை அளவிடுவது மிகவும் கடினமானது என்ற போதிலும், மக்கள் உணவு உட்கொள்ளும் விகிதம் அதிகரித்திருக்கிறது என்பதி லிலிருந்து அவர்களின் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு குறைந்திருக்கும் என்று நம்புவதற்குறிய ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கும் நிலையில், நேரடி பண மாற்றத் திட்டம் கொண்டுவரப்பட்டால், என்ன நடக்கும்  என்பதை கணிக்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பொதுவினியோகத் திட்டத்தின் படியான மானிய முறையையும், நேரடி பண மாற்ற முறையையும் ஒப்பிட்டு பார்த்தால், நேரடி பண மாற்றத் திட்டத்தின்படி பொது மக்களுக்கு கிடைக்கும் பணத்தைக்கொண்டு அவர்கள் உணவு உட்கொள்வதன் மூலம்         அவர்களுக்கு கிடைக்கும் கலோரிகளைவிட, பொதுவினியோகத் திட்டத்தின்படி பொதுமக்களுக்கு கிடைக்கும் பணத்தைக்கொண்டு அவர்கள் உணவு உட்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கலோரிகளின் அளவு இருமடங்காக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • நேரடி பண மாற்றத் திட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போதுள்ள உணவு மானிய முறையே சிறந்தது என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும் போதிலும், நலிலிவடைந்த பிரிவினருக்கு நேரடி பண மாற்றத் திட்டத்தை செயல் படுத்துவது சிறந்தது என்ற வாதத்தில் அர்த்தமுள்ளது. இந்தியாவில் நேரடி பண மாற்ற முறையில் வழங்கப்பட்டுவரும் கைம்பெண்கள் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகியவை, ஏழைக் குடும்பங்கள் தங்களுக்கு தேவை யான பொதுவினியோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட் களை வாங்கிக் கொள்வதற்கு மிகவும் உபயோகமாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த வகையில் நேரடி பணமாற்றத் திட்டம் முக்கியம் பெறுகிறது  என்றால், இப்போது நடைமுறையில் உள்ள மானியத்திற்கு மாற்றாக இவைக் கொண்டுவரப்படவில்லை என்பதுதான். இதேபோல பண மாற்றத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவத்திலிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் ஆகும். லத்தீன் அமெரிக்க நாடு களில் உள்ள மக்களின் பாதிப்பு அளவு நிச்சயம் நம்மைவிட குறைவாகவே இருக்கும். இருந்தும்  அந் நாட்டு அரசாங்கங்கள் நேரடி பண மாற்ற உதவியை வழங்குவதற்கு காரணம் என்னவெனில், அந் நாட்டு மக்கள் பிற பயன்களை அதிகமாக பெற வேண்டும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான். மிகவும் பிரபலமான “போல்சா பேமிலியா திட்டம்’ உள்ளிட்ட அனைத்து நேரடி பண மாற்றத் திட்டங்களின் நோக்கம் என்னவெனில், ஏற்கனவே உள்ள அடிப்படை மானிய சேவைகளை அனைவரும் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் வழங்குவதுதான். மாறாக, அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்ற அரசின் உறுதிப் பாட்டிலிலிருந்து பின் வாங்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட மாற்றுத்திட்டங்கள் அல்ல இவை. இந்தியாவில் அடிப்படை வசதிகளோ அல்லது சேவைகளோ அதிகளவில் வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், அந்த நாடுகளில் ஏராளமான அடிப்படை வசதி களை வழங்கிவிட்டு அதற்கு மேலாக இந்த சலுகைகளை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதிர்ஷ்டவசமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நேரடி பண மாற்றத் திட்டம் என்பது இப்போது இருக்கும் மானியத் திட்டங்களை ஒழித்துவிட்டு முழுக்க முழுக்க பணமாற்ற முறைக்கே நாட்டை அழைத்து செல்லும் நோக்குடன் கொண்டு வரப்பட்டவை அல்ல. இந்தியாவில், நேரடி பண மாற்றத் திட்டங்கள் எனப்படுபவை வறுமையை ஒழிக்கும் நோக்குடன் காலம்காலமாகவே நடைமுறையில் இருப்பவை ஆகும். ஆனால், தற்போதைய திட்டம் என்பது அந்த உதவிகள் வழங்கப்படும் முறையை மாற்றி சேவை வழங்கலை ஒழுங்குபடுத்தும் முயற்சி ஆகும். நேரடி பண மாற்றத் திட்டத்தின்படி அதிக அளவில் வழங்கப்படவிருப்பவை கல்வி உதவித் தொகைகள்தான். இவை ஏற்கனவே நேரடி பண மாற்ற முறையில்தான் உள்ளது. நேரடி பண மாற்ற முறை என்று கூறுவதன் நோக்கம் என்னவெனில், இவை தற்போது வரை மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டோ அல்லது காசோலையாக வழங்கப்பட்டோதான் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல் படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு திட்டம் கூட இப்போதைய நேரடி பண மாற்றத் திட்டத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தத் திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரே அம்சம் என்னவென்றால், பயனாளிகளின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான கூடுதல் சரிபார்ப்பு முறைதான். அதுதான் ஆதார் (Aadhaar, UDI- Unique Identity Card)  ஆகும். இது ஒரு பிரச்சினையில்லை என்ற நிலையில் இந்த பிரச்சினையை அணுகுவதற்கான நேரடி பண மாற்றமுறை அதிக செலவு பிடிக்கக்கூடியதோ என்ற சந்தேகம் அனைவரிடமும் நிலவுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பல மாவட்டங்களில் ஆதார் திட்டத்திற்கான பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே ஆதார் எண் இல்லாததாலோ அல்லது கைரேகை அடிப் படையிலான கருவி நமது அடையாளத்தை ஏற்க மறுத்து விட்டாலோ ஏற்கனவே உள்ள பயனாளிகள் சலுகைகளை இழக்கவேண்டி வருமோ என்ற பயம் ஏற்படுவது இயற்கை தானே. எனினும், ஏழை மக்களை சென்றடையயக் கூடிய சமூகபாதுகாப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால், பெரிய அளவில் கவலைப்படத்தேவையில்லை. மேலும் இத்திட்டங்களில் போலிலி பயனாளிகள் எவரும் இல்லை என்பதால் இவற்றை ஆதார் தளத்துடன் இணைப்பதால் பெரிய அளவில், ஓரளவே பயன் கிடைக்கும். எனினும், இத்திட்டத்திற்கு போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டால் கூட எந்த பிரச்சினையும் இல்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் முதலில் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக இருந்த இத்திட்டம் தற்போது மொத்தம், 21 மாவட்டங்களில்தான் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 2 லட்சம் குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தின்படி பயனடைவார்கள். அதைவிட முக்கியமாக உணவு, உரம் மானியம் போன்றவை மாற்றப் படாது என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
  • புதிய அறிவிப்பின் ஒரே முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆதார் என்ற அடையாளம் காட்டும் கருவி முறையாக செயல்படுகிறதா என்பதை சோதித்து பார்ப்பது தான். இதே நோக்கத்துடன் ஜார்கண்ட் மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும், கர்நாடகத்தில் சமையல் எரிவாயு திட்டமும், ஆந்திராவில் உணவு மானியங்கள் திட்டமும் கடந்த ஓராண்டுக்கு முன்பிலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைத் திட்டங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக கிடைத்த முடிவுகள் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்ட அனுபவம் மட்டும்தான் நேரடி பண மாற்ற திட்டத்தில் பயனளிக்காத ஒன்று என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும. அதேநேரத்தில் அங்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேறு இரண்டு காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இத்திட்டம் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அவை என்னவெனில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேரடி பணமாற்றத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் செயல்படுத்தப்படுகிறது என்பதும், இம்மாவட்டத்தில் ஆதார் திட்டத்தில் பதிவு செய்து கொண்டிருப்போரின் எண்ணிக்கை 99%க்கும் அதிகம் ஆகும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரப்பட்டிருக்கும் அளவை பார்க்கும்போது, கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைப் போலவே ஆந்திராவிலும் இத்திட்டம் நிச்சயமாக வெற்றிபெறும்.
  • நேரடிப் பண மாற்றத் திட்டம் தொடர்பாக தற்போது கைவசம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் சோதனைத் திட்டங்களின் வெற்றி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இத்திட்டம் மாயாஜாலமோ அல்லது விரும்பத்தகாத திட்டமோ இல்லை என்பதை உணர முடியும். ஆனால், இங்கு சொல்லப்படவேண்டிய செய்தி என்னவென்றால், தொழில்நுட்ப வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும் முழுமை யாக சென்றடையாத நிலையில், அந்த தொழில் நுட்பத்தை செயல்படுத்துவது சேவை வழங்கலை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுவதைவிட, தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு அவப் பெயரை தேடித் தரவே உதவும். மற்றொருபுறம், இத்தகைய முயற்சிகள் எவையாக இருந்தாலும், அவை தற்போது நடை முறையில் இருக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும். தற்போது மானியமாக வழங்கப்படும் உதவி களை, போதிய அளவுக்கு வங்கிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நேரடி பண மாற்ற  முறைக்கு மாற்றினால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். வங்கி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், பொதுவினியோகத் திட்டத்தின் நோக்கம் என்பது மக்களின் நுண்ணூட்டச்சத்து அளவை அதிகரிப்பதுதான் என்பதால், அதற்கு நேரடி  பண மாற்றத் திட்டம் நல்ல மாற்றாக இருக்க முடியாது. இங்கு காணப்படும் பிரச்சினை என்னவென்றால் மக்களின் மனநிலைதான். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட, அனைத்து விஷயங்களிலும் அண்டை வீட்டாருடன் சமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற விஷயங்களுக்கு தாராளமாக செலவழித்துவிட்டு உணவுக்காக மிகக் குறைந்த தொகையையே செலவிடும் அவல நிலை நிலவு கிறது. இதற்கான தீர்வு தற்போதுள்ள பொது வினியோக முறையை சீரமைப்பதுதானே தவிர, அதை அகற்றுவது அல்ல. ஒருவேளை நியாயவிலைக்கடைகளுக்கே பணம் நேரடியாக வழங்கப்படுவதாக இருந்தால், நேரடி பண மாற்றத் திட்டம், ஆதார் ஆகியவற்றுக்கும் தேவை இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த புதிய தொழில்நுட்பம் முறையாக பயன்படுத்தப்பட வேண்டு மானால், அதற்காக இன்னும் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.