இந்திய அரசியலமைப்பின் சட்ட வளர்ச்சி

  • அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டு மக்களை ஆட்சிபுரியும் அடிப்படையான அரசியல் முறையாகும். கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும்.
  • அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை நிர்வாகம் நீதித்துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து அவற்றில் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் பகுத்து பரஸ்பரம் அவற்றுக்கு இடையேயும் அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.
  • அரசியலமைப்பு என்பது அரசின் அங்கமாகிய சட்டங்களை இயற்றும் சட்டத்துறை, செயல்படுத்தும் செயல்துறை, சட்டங்களை நிலைநாட்டும் நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு, குடிமக்களின் உரிமைகள், கடமைகள்; குடிமக்கள், அரசு – அரசின் அங்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே நிலவும் தொடர்புகள்; அவற்றை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள் ஆகியவற்றின் தொகுப்பே ஆகும்.
  • அரசியலமைப்புச் சட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது ஆகும்.
  • இவை அனைத்துச் சட்டங்களையும்விட மேலாண்மை பொருந்திய முதன்மைச் சட்டங்களாகும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.