தில்லி காவல் துறையில் 4669 கான்ஸ்டபிள் பணி: இருபாலர்களும் விண்ணப்பிக்க அழைப்பு

delhipolice

  • தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 4669 கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன், தில்லி மத்திய போலீஸ் படை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 4,669
ஆண்கள்: 3,115
பெண்கள்: 1,554
வயது வரம்பு: 1.7.2016 தேதியின்படி ஆண் விண்ணப்பதாரர்கள் 18 – 21க்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 18 – 25க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: +2 டித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் குற்றப் பின்னணி விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்.டி பிரிவினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.10.2016
எழுத்து தேர்வு நடை பெறும் தேதி: 04.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

APPLY NOW
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.