மின்னோட்டம் வரையறை | tnpsc study materials

Review Score0

maanavan physics

 • மின்னோட்டங்கள் ஒரு கடத்தியில் ஒடினால் அது மின்னோட்டம் எனப்படும்.
 • ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் குறிப்பிட்ட பரப்பின் வழியே கடந்து செல்ல மின்னுட்டத்தின் அளவு மின்னோட்டம் என வரையறுக்கப்படும்.
 • சுருக்கமாக மின்னுட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.
 • எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசை மரபு மின்னோட்டத்தின் திசை ஆகும்.
 • Q அளவு மின்னுட்டம் ஒரு கடத்தியின் ஏதாவது ஒரு குறுக்குவெட்டுப்பரப்பின் வழியே t வினாடிகளில் பாய்ந்தால் கடத்தியில் மின்னோட்டம்
  • t = Q / t
 • மின்னுட்டத்தின் SI அலகு கூலும்.
 • 1 கூலும் என்பது 6 x 1018 எலக்ட்ரான்களின் மின்னுட்டத்திற்குச் சமம்.
 • மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் (A) ஆகும்.
 • ஒரு சுற்றில் மின்னோட்டத்தை அளக்க அம்மீட்டர் என்னும் கருவி பயன்படுகிறது.

மைக்கேல் பாரடே

டைனமோவைக் கண்டுபிடித்தவர்.

மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு

 • ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னுட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலை ஆகும்.
 • மின்னழுத்த வேறுபாடு ஒரு சுற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மின்கலன்களால் உருவாக்கப்படுகிறது.
 • இரு புள்ளிகளிடையே மின்னழுத்த வேறுபாடு (V) = வேலை (W) / மின்னுட்டம் (Q)

V = W / Q

 • மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு வோல்ட் (V)

ஓம் விதி

ஓம் விதிப்படி மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மாறா மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் இருக்கும்.

 

Click Here To Get More Details