டால்டனின் அணுக் கொள்கை

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

டால்டனின் அணுக் கொள்கை

 •  வெளியிடப்பட்ட ஆண்டு 1803 – 1807
 • அணுவை அதன் பகுதிப் பொருட்களாகப் பிரிக்க முடியாது.
 • வேதிவினையின் போது அணுக்களை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.
 • ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதாவது குறிப்பாக எல்லா அணுக்களும் ஒரே அணுநிறைகளை உடையன.
 • வெவ்வேறு தனிம அணுக்கள் வெவ்வேறு மாதிரியானைவை. அவற்றின் அணு நிறைகளும் வெவ்வேறானவை.

டால்டனின் கோட்பாடுகள்

 • ஒரு தனிமமானது மிகச்சிறிய, பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் ஆனது..
 • ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் அளவு, வடிவம், நிறை அமைப்பு என எல்லா வகையிலும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் வெவ்வேறு தனிமங்களின் அணுக்களின் நிறைகள் மற்றும் பண்புகள் மாறுபட்டிருக்கும்.
 • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எளிய முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்மங்களைத் தோற்று விக்கின்றன.
 • அணு மிகச்சிறிய துகளாய் இருப்பதால் அதன் துல்லியமான எடையைக் கணக்கிட முடியாது. எனவே டால்டன் அணுக்களின் ஒப்பு நிலையைப் பயன்படுத்தும் முறையை உருவாக்கினால் இந்த ஒப்புநிறையே தனிமங்களின் அணு நிறை ஆகும்.
 • அணு நிறை என்பது ஒரு தனிமத்தின் ஓர் அணுவின் நிறைக்கும் ஹைட்ரஜனின் ஓர் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதம் ஆகும்.
 • பொருண்மை அழியாவிதி, திட்டவிகித விதி, தலைகீழ் விகித விதி ஆகியவை இக்கொள்கையிலிருந்து பெறப்பட்டவை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]