Review Score0

வினைக் குணகம் -. அது சமநிலை மாறிலியுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது

  • சமநிலையற்ற நிலையில்வினைபடு பொருள்களின் செறிவிற்கும், வினைவிளை பொருள்களின் செறிவிற்கும் இடையேயான விகிதம்.
  • வினைக் குணகம் (Q)சமநிலை மாறிலி (K) உடன் பின்வருமாறு தொடர்பு கொண்டுள்ளது.
  1. Q < Kஆக இருக்கும் போது, அதிக வினைவிளை பொருள்கள் உருவாகும். அதாவது, முன்னோக்குவினை நிகழ்வது சாத்தியமாகிறது.
  2. Q > Kஆக இருக்கும் போது, வினைவிளை பொருள்களிலிருந்து அதிக அளவுவினைபடு பொருள்கள் உருவாகின்றன. அதாவது, பின்னோக்குவினை நிகழ்வதுசாத்தியமாகிறது.
  3. Q = Kஆக இருக்கும் போது, சமநிலை அடையும்.
  • Q மற்றும் K ஆகியவை ஒரே வெப்பம் மற்றும் அழுத்தம் உள்ள நிலையில் மேற்சொன்ன கூற்றுசாத்தியமாகிறது.

கணக்கிடு

 A). HI சிதைவடைதலின் சமநிலை மாறிலி 458°C வெப்பநிலையில் 2.06 x 10–2 ஆகும்சமநிலையில் HI மற்றும் I2 –ன் செறிவுகள் முறையே 0.36 M மற்றும் 0.15 M ஆகும். H2 –ன் சமநிலைச் செறிவைக் கணக்கிடு.

HI சிதைவடைதலின் சமநிலை மாறிலி, Kc = 2.06 x 10–2

சமநிலையில் HI -ன் செறிவு, [HI] = 0.36 M

சமநிலையில் I2 -ன் செறிவு, [I2] = 0.15 M

சமநிலையில் H2 -ன் செறிவு, [H2] = ?

2HI ⇌ H2 + I2

Kc = [H2] [I2] / [HI]2

2.06 x 10–2 = [H2] [0.15] / [0.36]2

[H2] = 2.06 x 10–2 x (0.36)2 / 0.15

சமநிலையில் H2 ன் செறிவு [H2] = 1.78 x 10–2

 B).. Cl2-ன் முன்னிலையில் PCl5 சிதைவடைதல் குறைவது ஏன்?

PCl5(g)  PCl3(g) + Cl2(g)

Kc = [PCl3] [Cl2] / [PCl5]

  • மேற்கண்ட சமன்பாட்டின்படி,Cl2 ன் செறிவை அதிகரிக்கும் போது Kc ன் மதிப்பு உயரும். ஆனால், Kc யானது ஒரு மாறிலியாகும். Kc ன் மதிப்பு மாறாமலிருக்க PCl5 மதிப்பு உயருகிறது. அல்லது PCl5 சிதைவடைதல் குறைகிறது. எனவே, Cl2 ன் செறிவை அதிகரிக்கும் போது பின்னோக்கு வினை நிகழ்வதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.
Click Here To Get More Details