Non-Aligned Movement

அணி சேரா இயக்கம் ஒரு பார்வை

 

அணி சேரா நாடுகள் Non Alignment Movement

 • இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கு மிடையில் பனிப்போர் தொடங்குகின்ற தருணத்தில்தான் இந்தியா சுதந்திரமடைந்தது. உலக நாடுகள் இரு அணிகளாக இருந்தன. அமெரிக்கா ஆதரவு நாடுகள் ஓரணியாகவும், சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆதரவு நாடுகள் இன்னொரு அணியாகவும் நின்றன. ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் இந்த அணி சேர்க்கைகளின் அடிப்படையில் அமைந் தபோதுதான், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முக்கியமானதொரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கினார். இருநாடு கள் பக்கமும் சேராத அணி சேரா நாடுகள் என்ற அணியை உருவாக்கினார்.
 • இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்குமான கொள்கையாகும். அதுபோல அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையையும் சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கொள்கையையும் அப்படியே பின்பற்றாமல் அரசும் தனியாரும் இணைந்து பங்கேற்கும் கலப்பு பொருளாதாரக் கொள்கையை உருவாக்கினார். இது நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கையாகும். பனிப் போர் காலத்தில் அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தோடு இணைய விரும்பாத நாடுகளால் 1961 ஆம் ஆண்டு இந்த அணி சேரா இயக்கம் நிறுவப்பட்டது.

 

பாண்டுங் மாநாடு

 • இந்த அமைப்பு நிறுவப்படுவதற்கு ஆசிய ஆப்ரிக்கா நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் 1955 ல் நடைபெற்ற போது எகிப்தின் நாசர், இந்தியாவின் நேரு, யூகேஸ்லேவியாவின் டிட்டோ ஆகியோரினால் அணிசேரா நாடுகளின் அமைவுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த மா நாட்டில் தான் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தொடர்பான பஞ்சசீலக் கொள்கையும் நேரு வெளியிட்டார்

பெல்கிரேடு மாநாடு

 • இம்மா நாடு முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கழித்து அணி சேரா நாடுகள் அமைப்பு முறையாக உருவானது இதன் முதல் மாநாடு 1961 ஆம் ஆண்டு யூகேஸ்லேவியா தலைனகர் பெல்கிரெடில் நடைபெற்றது. இம்மானாட்டில் மொத்தம் 25 நாடுகள் கலந்து கொண்டன

 

முக்கிய கொள்கைகள்

 • வல்லரசு நாடுகளின் ரானுவ கூட்டு முகாம்களில் சேரக்கூடாது
 • உலகில் எழும் பிரச்சனைகளை சுதந்திரத்துடன் ஆராய்ந்து மதிப்பீடு செய்து அது சம்பந்தமான கொள்கையை வகுக்க வேண்டும்
 • வல்லரசு நாடுகள் எடுக்கும் முடிவை கண்மூடித்தனமாக ஆதரிக்கக்கூடாது
 • பிற நாடுகள் சுதந்திரத்தை மதித்து அதன் இறையான்மையில் தலையிடக்கூடாது
 • பிற நாடுகள் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது
 • பிற நாடுகளுடன் சமாதன சகவாழ்வுக் கொள்கையை கடைபிடிக்கவேண்டும்
 • ஏகாதிபத்திய காலனி ஆதிக்கம் அது எந்த வடிவில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும்
 • இனஒதுக்கல் நிறவெறிக்கொள்கை ஒழிக்கப்பட வேண்டும்
 • பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் இருக்கவே கூடாது
 • நாடுகளிடையே பொருளாதரக் கூட்டுறவுகளை ஏற்படுத்து புதிய பன்னாட்டு பொருளியல் முறையை ஏற்படுத்த வேண்டும்
 • உலக அமைதி , படைக்குறைப்பு , அணு ஆயுத ஒழிப்பு ஆகுவை நிறைவேற்றப்பட்வேண்டும்

 

அணிசேரா இயக்கத்தின் குறைபாடுகள்

 

 • அணி சேரா இயக்கம் வேற்றுமையில் ஒற்றுமை கான விரும்பிய நாடுகள், முதலில் இவை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தையோ கண்டத்தையோ சார்ந்த்தவை அல்ல 5 கண்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன, எனவே இவற்றின் தேசிய நலன்களும் பலவகைப்பட்டதாகவே இருக்கின்றது.
 • மேலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியான அரசியலமைப்பு முறைகளைக் கொண்டதல்ல, சில நாடுகள் குடியாட்சியாகவும் சில நாடுகள் முடியாட்சி மற்றும் சமயம் சார்ந்த அரசுகள் , சமயம் சாரத அரசுகள் மூன்றாவதாக பண்பாடு ,கலாச்சாரம் , பொருளாதாரம் போன்றவற்றில் வேற்றுமைகள் காணப்படுவது இவற்றின் சுமூகமான வளார்ச்சிக்கு அடிகோலவில்லை.
 • கூட்டு சேரா நாடுகள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன, பொருளாதார வளர்ச்சிக்கும் ,தொழில் நுட்ப உதவிக்கும் பெரும்பாலும் வல்லரசு நாடுகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் அணி சேரா நாடுகளின் படைகள் வலிமையானதும் அல்ல.
 • அணிசேரா நாடுகள் வெறும் தீர்மானம் போடும் அமைப்பாக மட்டுமே இருக்கிறது. தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ செயல்படுவதற்கோ நிரந்தரமான அமைப்பு ஏதும் இல்லை . மேலும் அணிசேரா நாடுகள் தங்களுக்கிடையே குறிப்பாக ஈரான் , ஈராக் போர் , கம்பூசியா சிக்கல், இந்தியா, இலங்கை இனப்பிரச்சனை அரபு நாடுகள் சச்சரவு போன்றவற்றை தீர்க்க இயலவில்லை.
 • கூட்டுச்சேரா நாடுகள் இயக்கம் ரஷ்ய சார்புள்ள இயக்கமாக கருதப்பட்டது. அமெரிக்கவின் தவறுகளை உரத்த குரலில் கண்டிக்கும் போது ரஷ்யாவின் தவறுகளை கண்டும் கானாதாவாறு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அணி சேரா நாடுகள் சுதந்திர வெளினாட்டுக் கொள்கைகளை பின்பற்றுவதால் சில உலகப்பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தினை இந்நாடுள் எட்டவில்லை

 

அணிசேரா நாடுகளின் எதிர்காலம்

 • வல்லரசு நாடுகளிடையே கெடுபிடிபோர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இராணுவக் கூட்டுகள் அமைப்பதில் போட்டா போட்டி இருந்த போது அணி சேரா நாடுகளின் இயக்கத்திற்கு அர்த்தம் இருந்ததது. ஆனால் மாறிவரும் பன்னாட்டு அரசியல் நிலைகளை கானும் போது அணி சேரா இயக்கம் இனித் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பிறகு இரு துருவ மோதல்கள் குறைந்துவிட்டது என்றே கூறலாம். மேலும் தற்போது பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பானது பொருளாதார , தொழில் நுட்ப ரீதியில் வலுவடைந்து வருகிறது , உதாரணமாக சார்க் அமைப்பு, பிரிக்ஸ், ஆசியான் போன்ற அமைப்புகள் வலிமையடைந்து கொண்டு வருகின்றன. மேலும் காலத்திற்கேற்றவாறு இவ்வியக்கத்தினை நடத்திச் செல்ல தலைவர்கள் இப்போது இல்லை . என்னும் உலகில் அவ்வப்போது தோன்றும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஒருமித்த கருத்தினை உருவாக்குவதற்கு இதுபோன்ற இயக்கங்கள் தேவைதான் எனவும் தோன்றுகிறது.

 

முக்கிய ஒருவரித் தகவல்கள்

 • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மானாடு நடைபெறும்
 • முதல் மாநாடு நடைபெற்ற இடம் பெல்கிரேடு, 1961
 • 7வது மா நாடு நியு டெல்லி ,1983
 • 16வது மானாடு , ஈரான் , தலைனகர் , டெக்ரான் 2012
 • 17வது மா நாடு வெனிசுலாவே
 • ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வைர விழா ஆண்டையொட்டி பீமா டைமண்ட் என்ற புதிய பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) அதன் துணை வங்கிகளையும் மற்றும் பாரதிய மஹிளா வங்கியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், எஸ்.பி.ஐ.யின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ளது.
 • தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
 • ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தைக் கைப்பற்றினார்.
  அஜர்பைஜானின் கெபாலா நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.
 • மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் சவடேகர் பரம் இசான் (PARAM ISHAN)என்ற மீத்திறன் கணினி கவுகாத்தி ஐ.ஐ.டி யில் செப்டப்மப்ர் 19 அன்று துவங்கி வைத்தார். வடகிழக்கு மாநிலங்களிலேயே அதிக திறன்வாய்ந்த சூப்பர் கம்பூயுட்டர் இதுவாகும்.
 • ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதினின் யுனைட்டெட் ரஷ்யா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
 • இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் துன்புறுத்தலுக்கு ஆளான நாதியா முராத் பஸீ தாஹா என்னும் 23 வயதுப் பெண் இராக்கின் யஜீதி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.

 – IYA CHAMY

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.