அணுவின் பகுதிப் பொருட்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அணுவின் பகுதிப் பொருட்கள்

 •  எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்.
 • J. தாம்சன் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார்.
 • கோல்டஸ்டீன் நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டானை கண்டுபிடித்தார்.
 • சாட்விக் மின் சுமையற்ற நியூட்ரானைக் கண்டுபிடித்தார்.

மைக்கேல் பாரடே

 • மைக்கேல் பாரடே பருப்பொருளின் மின்தன்மை பற்றி முதலில் நிருபித்தவர் – மின்சாரம் என்பது “மின் அணுக்கள் என்ற துகள்” எனக்கூறியவர்.

சர் வில்லியம் குரூக்

 • 1878 – ல் மின்னிறக்கக் குழாயை பயன்படுத்தி எதிர்மின் கதிர்கள் (கேதோடு கதிர்கள்) பற்றி ஆராய்ச்சி செய்தார்.
 • இவர் பயன்படுத்திய மின்னிறக்க குழாய் குரூக்குழாய் (CRT கதிர் குழாய்) எனப்படும்.

எதிர்மின் வாய் கதிர்களின் பண்புகள்:

 • எதிர்மின்வாய் கதிர்கள் நேர் கோட்டில் இயங்குகின்றன.
 • இவை நிறையுடைய நுண்ணியத் துகள்களைப் பெற்றிருக்கின்றன.
 • காந்த, மின்புலங்களில் இவை எதிர்மின் துகள்களைப் போல் விளக்கம் அடைகின்றன.
 • இவை மின்னிறக்கக் குழாய்க் சுவர்களைத் தாக்கி வெளிர் பச்சைநிற இனறொளிர்தலைச் செய்கின்றன.
 • இவை வாயுக்களை அயனியாக்குகின்றன.
 • அதிவேக எதிர்மின்வாய் கதிர்கள் டங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களைத் தாக்கும் கதிர்களை உருவாக்குகின்றன.
 • மெல்லிய உலோகத் தகடுகளை இக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]