இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மகளிர் நலன் தொடர்புடைய சரத்துக்கள்

Review Score0

சரத்து 14

 சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

சரத்து 15

  • மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் செய்யக் கூடாது.

சரத்து 15 (3)

 மகளிர் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது. இந்தச் சரத்தினை நிலை நாட்டும் வண்ணம் நீதிமன்றத் தீர்ப்புகளும் வெளியாகியுள்ளன.

  • இந்தச் சரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 உள்ளாட்சித் துறையில் மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சரத்து 21

 வாழ்க்கை வாழ்வதற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளித்தல். இந்தச் சரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலினக் கொடுமைகளை எதிர்த்துப் பெண்களின் உரிமைகளைக் காக்க வழி செய்துள்ளன.

Click Here To Get More Details