வைரஸ்களின் வகைப்பாடு

Deal Score0

வைரஸ்களின் வகைப்பாடு :

 • வைரஸ்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 1. தாவர வைரஸ்கள்
 2. விலங்கு வைரஸ்கள்
 3. பூஞ்சைகளின் வைரஸ்கள்
 4. பாக்டீரியாவின் வைரஸ்கள்

தாவர வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு

 • புகையிலை, வெள்ளரி மற்றும் காலிஃபிளவரின் பல்வண்ண இலைநோயை உருவாக்கும் வைரஸ்கள், வாழையின் உச்சிக்கொத்து நோய், தக்காளியின் புள்ளி அழுகல் நோய் போன்றவற்றை உருவாக்கும் வைரஸ்களும் தாவர வைரஸ்களாகும்.
 • காலிஃபிளவர் மொசைக் வைரஸ் தவிர அனைத்து தாவர வைரஸ்களும் ஆர்.என்.ஏ.வை மரபுப் பொருளாகக் கொண்டிருக்கும்.
 • விலங்குகளைக் தாக்கி நோயை உண்டாக்கும் வைரஸ்கள் விலங்கு வைரஸ்கள் ஆகும்.
 • சார்ஸ் (கொரோனோ வைரஸ்), எய்ட்ஸ் (ரெட்ரோ வைரஸ்), வெறி நாய்க்கடி (ரேபிஸ் வைரஸ் அல்லது லிஸ்ஸா வைரஸ்), பொன்னுக்கு வீங்கி (பாராமிக்சோ வைரஸ்), மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் வைரஸ்), டெங்கு காய்ச்சல் (ஃபிளேவி வைரஸ்), போலியோ (போலியோ வைரஸ்) சிக்கன் பாகஸ் (Chicken Pox) சின்னம்மை (வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ்) ஆகியன விலங்கு வைரஸ்கள் ஆகும்.
 • பூஞ்சைகளுக்கு நோய் உண்டாக்கும் மைக்கோ வைரஸ்கள் எனப்படும்.       நீலப்பசும்பாசிகளைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்கள் சயனோ ஃபேஜ்கள் எனப்படும்.
 • பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியோஃபேஜ்கள் எனப்படும்.
Click Here To Get More Details