குடிமகனின் உரிமைகளும், கடமைகளும்

Deal Score0
  1. நாட்டைக் காக்க குடிமகன் / குடிமகள் பயன்படுத்தும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்.
  2. நாட்டிற்குக் குடிமகன் / குடிமகள் ஆற்றும் பொதுநலம் பேணுவது உள்ளிட்டக் கடமைகள்.
  3. குடிமகன் / குடிமகள் நாட்டுப்பற்றுடன் இருத்தல் போன்றவை குடிமகனின் / குடிமகளின் உரிமைகளும் கடமைகளும் ஆகும்.

 

அரசியலமைப்புச் சட்டத்தின் குடியுரிமைகள்

  • அரசியலமைப்புச் சட்டத்தின் 5 முதல் 8 வரையிலான பிரிவுகள் குடியுரிமையைக் குடிமகனுக்கு / குடிமகளுக்கு அளிக்கின்றன.

 

  1. இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வசிப்பவர்கள்.

 

  1. இந்தியாவில் பிறக்காமல் இந்தியாவில் வாழ்பவர்கள் பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

 

  1. இந்தியாவில் பிறக்காமல் பொதுவாக இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள்.

 

  1. இந்தியாவில் வசித்து 1947 மார்ச் முதல் தேதிக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து, பின்னர் குடியேற்ற அனுமதி மூலம் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியவர்கள்.

 

  1. பாகிஸ்தானில் வசித்து 1947 ஜீலை 19 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது அந்தத் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து இங்கே ஆறு மாதங்களுக்கு மேல் வசித்து முறைப்படி பதிவு செய்து கொண்டவர்கள்.

 

  1. இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றவர்கள் – அவர்களே இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது பாட்டியர் பாட்டன்மார்களில் ஒருவரோ இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவர்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
Click Here To Get More Details