முதலமைச்சர்

  • தேர்தலில் வெற்றி பெற்ற / பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரை ஆளுநர் அழைப்பார்.
  • மாநில நிர்வாகம் ஏற்கவும் பிற அமைச்சர்களைப் பட்டியலிடவும் அறிவிப்பார்.
  • பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரையே மாநில முதலமைச்சராக நியமிப்பார்.
  • பாராளுமன்ற முறை அரசாங்கம் மாநில அளவில் இயங்குவதால் மாநில நிர்வாகத் துறையின் பெயரளவுக்குத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர்.
  • Art (163) மாநிலத்தின் பணிகளை செய்வதற்கு ஆளுநருக்கு உதவியாக முதலமைச்சரை தலைவராக கொண்ட ஒரு அமைச்சரவை இருக்கும்.
  • Art (164) முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
  • முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவராவார். எனவே அதிக அதிகாரங்களையும் பணிகளையும் பெற்றுள்ளார்.
  • அமைச்சராக நியமிக்கப்படுபவரை ஆளுநருக்கு பரிந்துரைக்கிறார்.
  • அமைச்சர்களுக்கான துறைகளை பகிர்ந்தளிக்கிறார்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.