அன்றாட வாழ்வில் வேதியியல்

அன்றாட வாழ்வில் வேதியியல்

சிமெண்ட்

  • சிமெண்டைக் கண்டுபிடித்தவர் ஜோசப் அஸ்பிடின் என்ற ஆங்கிலேய கட்டடத் தொழிலாளி (1824)
  • இவர் கண்டுபிடித்த சிமெண்டைப் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைத்தனர்.
  • சிமெண்ட் என்பது சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம், போன்ற பொருட்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வெப்பப்படுத்தி, குளிர வைத்து, பொடியாக்கிக் கிடைக்கும் ஒரு வேதிக் கலவையாகும்.
  • காரை என்பது சிமெண்ட்டும், மணலும், நீருடன் கலந்த கலவை ஆகும்.
  • கற்காரை (கான்கிரீட்) என்பது சிமெண்ட், மணல், ஜல்லிக் கற்கள், நீர் சேர்ந்த கலவை, கட்டடங்கள், பாலங்கள், அணைக்கட்டுகள் கட்டுவதற்கு இது பயன்படுகிறது.
  • வலுவூட்டப்பட்ட காரை – இரும்புக் கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவது.
  • வலுவூட்டப்பட்ட காரைகள், அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது. இதைக் கொண்டு பெரிய குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வடிகால்களையும் அமைக்கிறார்கள்.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.