மின்னோட்டத்தின் வேதிவிளைவுகள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

maanavan physics

  • திரவங்களின் (கரைசல்களின்) வழியே மின்னோட்டம் பாயும்போது. அவற்றினுள் ஒரு வேதி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனையே மின்னோட்டத்தின் வேதி விளைவு என்கிறோம்.

ஒளி உமிழ்டையோடு (LED)

  • பொதுவாக ஒரு மின் சுற்றில் மின்னேட்டம் பாய்கிறதா என்பதை ஒரு மின் விளக்கைப் பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளலாம். இருப்பினும். பாயும் மின்னோட்டத்தின் அளவு மிகக்குறைவாக இருப்பின் மின் விளக்கு ஒளிராமல் போகும்.
  • எனவே, மின்விளக்குக்குப் பதிலாக ஒரு ஒளி உமிழ் டையோடைப் பயன்படுத்தி மிகக்குறைந்த மின்னோட்டத்திலும் ஒளிரச் செய்யலாம்.
  • ஒளி உமிழ் டையோடு என்பது குறை கடத்திப் பொருள்களால் செய்யப்பட்டது. இவற்றை ஒளிரச்செய்ய மிகக்குறைந்த அளவு மின்னோட்டமே போதுமானது.
  • இவை இரு கால்களுடன் காணப்படும்.
  • ஒரு கால் பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் காணப்படும்.
  • இவற்றின் சிறிய கால் எப்போதும் எதிர்மின்முனையுடனும் பெரிய கால் எப்போதும் நேர்மின்முனையுடனும் இணைக்கப்படவேண்டும்.
  • ஒளி உமிழ் டையோடு சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் எனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]