Chemical Bonds | TNPSC | TET Study Materials | வேதிப் பிணைப்புகள்

வேதிப் பிணைப்புகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வேதிப் பிணைப்புகள்:

  • தனிமங்களின் அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உண்டாக்குகின்றன. மூலக்கூறுகளில் அணுக்கள் இணைந்து இருக்கக் காரணமான கவர்ச்சி விசையை வேதிப் பிணைப்பு எனப்படும்.
  • பல்வேறு ஈர்ப்பு விசைகளால் மூலக்கூறில் உள்ள அணுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஈர்ப்பு விசைகளே வேதிப்பிணைப்புகள் எனப்படுகின்றன.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசையினால் பிணைந்துள்ளதையே வேதிப்பிணைப்பு என்கிறோம்.

(எ.கா).தொகுதி I மற்றும் தொகுதி-II இல் உள்ள கார உலோகங்கள், காரமண் உலோகங்கள் இப்பண்பைப் பெற்றுள்ளன.

  • அனைத்து கார உலோகங்களும் அதிக வினைபுரியும் அண்மையைப் பெற்றுள்ளன.
  • எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின் அயனியாக மாறும் தன்மையுடைய தனிமங்கள் எதிர்மின் தனிமங்கள் எனப்படும்.

(எ.கா). 17-வது தொகுதியிலுள்ள தனிமங்கள் அதன் அருகிலுள்ள மந்த வாயுக்களைவிட ஒர் எலக்ட்ரான் குறைவாகப் பெற்றுள்ளன.  எனவே, அவை உலோகங்களிலிருந்து ஓர் எலக்ட்ரானைப் பெற்று எதிர்மின் சுமையுடைய அயனியாக மாறுகின்றன.

  • வேதிப்பொருட்கள், வெப்பநிலை, ஆற்றல் போன்ற வெளிக்காரணிகளால் பாதிக்காத வரை பிணைப்பானது நிலையாக உள்ளது.
  • H2, O2, Cl2, N2 போன்ற இரண்டு ஒரே வகையான அணுக்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகள் ஒரே அணுக்கரு இரு அணு மூலக்கூறுகள் எனப்படும்.
  • CO, HCL, NO, HBr போன்ற இரண்டு வெவ்வேறு வகையான அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் பல அணுக்கரு இரு அணு மூலக்கூறுகள் எனப்படும்.
  • ஒரே வகையான பல அணுக்கள் பிணைந்துள்ள (P4,S8 போன்றவை) மூலக்கூறுகள் ஒற்றை அணுக்கரு பல அணு மூலக்கூறுகள் எனப்படும்.
  • பெரும்பான்மையான மூலக்கூறுகளில் இரண்டுக்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான அணுக்கள் பிணைந்துள்ளன.
  • (NH3,CH3COOH, SO2, HCHO போன்றவை) இவை பல அணுக்கரு பல அணு மூலக்கூறுகள் எனப்படும்.
Click Here To Get More Details