மைய வங்கி

  • நாட்டில் ஒரு தலைமை நிறுவனம் (Apex Institution) இருந்தால் மட்டுமே அது அந்நாட்டின் வங்கியமைப்பு முறையையும் அதன் செயல்பாடுகளையும் முறையாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வழி நடத்திச் செல்லமுடியும். அவ்வாறான ஒரு தலைமை நிறுவனமே ‘மைய வங்கி’ எனப்படுகிறது. நாட்டின் மைய வங்கியானது ‘தன்னாட்சி நிறுவனமாகும்’. மைய வங்கி வயிக வங்கிகளை தனது கட்டப்பாட்டிற்குள் செயல்படவும், மேற்பார்வை செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. மைய வங்கி அந்நாட்டின் பணம் மற்றும் வங்கியியல் முறையை கட்டுப் படுத்துகிறது. முதல் உலகப் போருக்குப்பின் 1929 ஆம் ஆண்டு புருசெல்சில் நடைபெற்ற மாநாட்டில் சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் (International Monetary conference) ஒவ்வொரு நாட்டிலும் மைய வங்கி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
  • அதன் அடிப்படையில் நமது நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இங்கிலாந்து நாட்டின் மைய வங்கியான ‘இங்கிலாந்து வங்கி’ (Bank of England) 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • மைய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளை ‘இங்கிலாந்து வங்கி’ விளக்குவதால் இது ‘வங்கிகளின் வங்கி’ (Mother of Central Banks) என்றழைக்கப்படுகிறது.
  • பிரன்சு நாட்டின் மைய வங்கி ‘பாங்க் ஆப் பிரான்சு’ கி.பி.1800 ல் நிறுவப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் தனது மைய வங்கியான “கூட்டு ரிசர்வ்முறை” (Federal Reserve System) 1914 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.